பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 25

ஆன்ம ஞானமே மீராவின் சிந்தனைச் சக்தியாக விளங்கி ஒளியுதரும் சுடர்களாக இருந்ததால், மீரா தனது கனவுகளில் பல மகான்களையும், ஆன்ம சிந்தனையாளர்களையும் சந்தித்தார்.

நாடு, மொழி, இனம், மதம், சாதி என்ற பேதங்கள் இல்லாமல், வள்ளல் பெருமான் குறிப்பிட்ட அனைத்துலக மனித நேய ஒருமைப்பாட்டு உணர்வுகளுக்குச் சம்பந்த முடைய மகான்களை, மகரிஷிகளை, அருளார்களை, மதச் சீர்திருத்த மறுமலர்ச்சி மேதைகளை, ஆன்மீகத் தத்துவத்தில் கரை கண்டவர்களை, தீர்க்க தரிசிகளை, தினந்தோறும் கனவுகளில் சந்தித்தாள் மீரா அந்த ஞானிகளது போதனை களையும் மீரா கனவு நிலையில் பெற்று ஞானத்தைக் கனிகளாக்கிக் கொண்டாள் மீரா,

சிக்மண்ட் பிராய்டு போலவும், ஜங் எனும் மேதை போலவும், தனது உறக்கத்தில் உதிக்கும் கனவுகளை முழுவதுமாக மறு தினம் சிந்தித்து நினைவில் நிறுத்துவார் மீரா! அதைக் குறித்துத் தொடர்பாகச் சிந்திப்பார்.

அதற்குச் சம்பந்தப் பட்ட சில ஆன்ம வினாக்களைத் தன்னையே கேட்டுக் கொண்டு, உரிய, தக்க, விடைகளை கனவில் அவள் கண்ட மகாத்மாக்களுடன் தொடர்பு கொண்டே பதில் பெறுவாள்.

தினந்தோறும் அவள் கனவில் கண்ட ஆன்ம ஞானிகளுள் ஒருவரிடம் மீராவுக்கு அனுக்கமான ஞானத் தொடர்பு உருவானது.

அன்றுவரை மீரா மகா பாரதத்தில் வரும் கிருஷ்ண பரமாத்மாவைப் பற்றியோ, பகவத் கீதாவுபதேசத்தைப் பற்றியோ முன் - பின்னாக எதுவும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அவள் அந்தக் கனவு மகாத்மாவைக் கிருஷ்ணன் என்றே பெயரிட்டு அழைத்து வந்தது வியப்பாகவே இருந்தது மீராவுக்கு:

மீரா, 1914-ஆம் ஆண்டில், முதன் முதலாக பிரெஞ்சு ஆட்சியிலே இருந்த புதுச்சேரி நகருக்கு வருகை தந்தார்.