பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அங்கேதான்் முதன் முறையாக மகான் அரவிந்தரை, அன்னை மீரா பார்த்தார்; வியந்து போனார் காரணம், தாம் கனவில் கண்ட ஆன்மீக மகான்களுள் இவரும் ஒருவரே என்பதை மீரா, அன்று பார்த்த முதல் பார்வையிலேயே புரிந்து கொண்டதால் அவரை ஆச்சரியத்தோடு நோக்கினார்:

தனக்குத் தான்ே மனத்தோடு அவர் பேசிக் கொண்ட போது, தனக்குக் கனவில் வந்தவரும், தான்் கிருஷ்ணன் என்று பெயரிட்டு அழைத்தவரும் இவர்தான்் என்பதை அன்னை மீரா - மகரிஷி அரவிந்தரை, நினைவு கூர்ந்தார்.

மீரா கண்ட கனவுகளுக்கும், நாம் காணும் கனவுகளுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு. தனது பதின் மூன்றாம் வயதில் மீரா கண்ட கனவொன்றை, அவர் அன்னை வடிவமாகி புதுச்சேரியில் தொண்டு செய்து கொண்டிருந்த காலத்தில் அதை எவ்வாறு குறிப்பிடுகிறார் பாருங்கள்:

'எனக்கு ஏறக்குறைய பதின்மூன்று வயதாக இருக்கும் போது, ஏறக்குறைய ஓராண்டு காலத்திற்கு, ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் நடந்த நிகழச்சி இது.

இரவு வந்ததும் படுக்கையில் படுத்த பிறகு, நான் உடலை விட்டு விட்டு வெளியே வருவேன். நகரத்தின் மையத்தில் நான் மேலே மேலே போய்க் கொண்டே இருக்கும். தங்க மயமான உடை ஒன்றை அணிந்திருப்பேன். மேலே நான் செல்லச் செல்ல அந்த உடையும் பெரியதாகிக் கொண்டே போய், கடைசியில் அது நகரம் முழுவதற்குமே ஒரு குடை போல ஆகிவிடும்.

அதற்குப் பிறகு நாலா திசைகளில் இருந்தும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும், வியாதி யாளர்களும், துன்புறுவோரும் என்னருகே வருவார்கள். அவர்களது துன்பங்களைச் சொல்லி என்னிடம் ஏதாவது உதவி கேட்பார்கள்.

எனது உடையை அவர்கள் தொட்டதும் ஆறுதல் பெறுவார் கள், பிறகு அதிக மகிழ்ச்சியுடனும், அதிக பலத்துடனும் தங்களது