பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 31

எப்போதும் உலக மக்கள் சிந்தனைகளே அவரது உள்ளத்திலே உயிரோட்டமாக உலா வந்து கொண்டிருந்தன.

அடிக்கடி மீரா தியானத்தில் ஆழ்ந்து விடுவார். அந்த நேரங்களில் எல்லாம் அவருக்கு இறை தொடர்பு சிந்தனைகளே நெருக்கமாக உருவானது. அதன் பயன் என்ன தெரியுமா?

இறைவனுக்குத் தன்னை, தனது வாழ்க்கையை, முழுவதுமே தந்துவிடுவது என்ற உறுதி கொண்டு, தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும், ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு செயலையும், அவற்றின் சிறுசிறு பிரச்சினைகளையும் விடாது, இறைவனுக்கு நைவேத்தியமாக, அன்புக் காணிக்கையாக்கி வந்தார்:

இறைவனது வழிபாடுகளில் கடவுளிடம் பேசும் உரையாடல் கள் அனைத்தும், மீராவிடம் பக்தி ததும்பும் அழகான பிரார்த்தனை களாக உருவெடுத்தன.

தியானமும் பிரார்த்தனைகளும் என்ற நூலை மீரா அப்போது எழுதி முடித்தார். அந்தப் புத்தகம் 1914 ஆம் ஆண்டிலிருந்து 1919ஆம் ஆண்டு வரை எழுதப்பட்ட தியான வரலாற்றுச் சம்பவங்களாகும்.

இந்த தியான நூலைப் படிப்போரின் இதயங்களில், துய, பரிசுத்த, தெய்வீக அன்பை வெள்ளமாகப் பாய்ச்சி, அவர்கள் ஆன்மீகத்தின் சிகரங்களுக்கும், ஆழங்களுக்கும், விசாலங் களுக்கும் அழைத்துச் செல்லும் ஞானம் பெற்றவை ஆகும்.

கல்வியிலும் கலையிலும், ஆன்மீக ஞானத்திலும் வல்ல வராக, நல்லவராக விளங்கிய மீரா, Occultism எனப்படும் சித்து ஞானத்திலும் நன்கு தேர்ச்சி பெற்ற தெய்வ மங்கையாகத் திகழ்ந்தார்.

சித்து ஞானம் என்றால் என்னவென்று கேட்கிறீர்களா? நாம் பார்க்கும் இந்தத் தூய உலகைத் தவிர, நமது பார்வைக்குப் புலப்படாத உலகுகள் பல இருக்கின்றன. அந்த உலகங்களில் பலவித உயிர்கள் வாழ்கின்றன.