பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

இவ்வாறு வாழும் இந்த ஜீவர்கள் அல்லது உயிர்கள், அடிக்கடி நாம் வாழும் இந்த உலகத்தின் வாழ்விலும் அவர்கள் தலையீடு செய்கிறார்கள். இவர்களில் சிலரால் நமக்கு நன்மைகளும்; நடக்கின்றன. தீமைகளும் விளைகின்றன.

சித்து ஞானத்தில் தேர்ச்சி பெற்றவர்களே, இந்த உலகுகளைக் காண்பார்கள். அவர்களால்தான்் அவைகளில் உள்ள உயிர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அந்த உயிர்கள் மீது ஆதிக்கமும் செலுத்த முடியும். அதன் வாயிலாக நாம் வாழும் உலகத்துக்கும் உதவிகளைச் செய்ய முடியும்.

எல்லோராலும் இப்படிப்பட்ட சித்து ஞானத்தைப் பெற முடியுமா? என்றால் - முடியாது. அதற்கும் சில தகுதிகள், பயிற்சிகள் தேவைப்படுகின்றன. அந்தத் தேவைகளில் முதன்மையானது அஞ்சாமை, சுயநலம் இல்லாமை. இவைதான்் அடிப்படைத் தேவைகள். இவை இல்லாவிட்டால், சித்துஞானம் பயிற்சி பெற முடியாது. ஒரு கால் பயிற்சி பெற நிலை ஏற்பட்டால் - அது ஆபத்தாகவே முடியும்.

இந்த அடிப்படைத் தேவைகள் மீராவுக்கு இயற்கை யாகவே அமைந்திருந்தன. குக்கும கண்ணோட்டம் மீராவுக்கு இயல்பாகவே இருந்தது. இருந்தாலும், எந்தக் கலையைப் பயின்றாலும் ஓர் ஆசான் தேவை அல்லவா? அப்போதுதான்ே - அந்தக் கலையை நுண்மாண் நுழைபுலமாக நுகர முடியும்?

ஆனால், மீராவைச் சுற்றி இருப்பவர்களுக்கு இதுபற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. எனவே, சித்து ஞானம் முழுமையாக உணர்ந்த தம்பதியர் இருவர்: ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அல்ஜீரியா என்ற நாட்டிலே இருப்பதாக மீரா கேள்விப்பட்டு - அல்ஜீரியா சென்றார்.

அந்த சித்து ஞானம் பெற்ற சித்தரின் பெயர் தியோன். அவருடைய மனைவி திருமதி. தியோன், கணவனைவிட மனைவி சித்து ஞானத்தில் நன்கு தேர்ச்சிப் பெற்றவராக இருந்ததை மீரா உணர்ந்தார்.