பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

உடனே தியோன் அங்கே மரத்தில் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்த பப்பாளிப் பழத்தை அறுத்து, அதை முழுசாக அப்படியே தனது மார்பின் மேல் வைத்துக் கொண்டு மல்லாந்து படுத்துக் கொண்டார். உடலைத் தளர்த்திக் கொண்டார். ஆடாமல் அசையாமல் சிறிது நேரம் தரையில் படுத்தே இருந்தார். கொஞ்ச நேரம் பொறுத்து மீரா அந்தப் பழத்தை எடுத்துப் பார்க்கும்போது, உருண்டையாக இருந்த அப் பழம் தட்டையாகி விட்டதைக் கண்டு ஆச்சர்யப் பட்டார்.

பழம் தட்டையானதற்கு என்ன காரணம் என்று மீரா, தியோனைக் கேட்டபோது, அதற்கு அவர், 'பப்பாளிப் பழத்திலிருந்த சத்துக்களை எல்லாம் சித்து ஞானத்தால் உறிஞ்சி, எனது உடலுக்குள் செலுத்திக் கொண்டேன். இப்போது எனக்கிருந்த களைப்பெல்லாம் போய்விட்டது மட்டுமன்று, உடல் தெம்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது பார் என்று தனது உடலையும் வயிற்றையும் தடவிக் காட்டினார் திருமதி. தியோன். யாரொருவருக்குக் களைப்பு ஏற்பட்டாலும், பக்கத்தில் உள்ள பழங்களை எடுத்துத் தனது மார்பு மேல்; அதே களைப்பு எண்ணத் தோடு வைத்துக் கொண்டு, எனது உடலுக்குத் தெம்பு வேண்டும் என்ற எண்ணத்தில் கொஞ்ச நேரம் தியானத்தில் திளைத்தால் - அந்தப் பழங்களின் சாறுகள் எல்லாம் உடலுக்குள் ஊடுருவிச் சென்றுக் களைப்பைப் போக்கிவிடும். இதுதான்் தக்க முறை" என்றார்.

அந்தப் பழங்களை வாய் வாயிலாக உண்டு அவற்றின் சாற்றை உறிஞ்சி உடலுக்குள் போக வைப்பது சாதாரணமாக எல்லாரும் செய்யும் வேலைதான்். அது இயற்கையான முறை, ஆனால், சிக்கலான முறை; நிச்சயமற்ற வழி:

ஆனால், தியானமுறையில் களைப்பைப் போக்கிக் கொள்வது செயற்கையான சித்த ஞானமுறை. புரிந்து கொண்டாயா மீரா? என்று திருமதி தியோன் கேட்டார்.

திருமதி தியோன் இதுபோன்ற எவ்வளவோ சித்து ஞான வழிகளை திருமதி மீராவுக்குக் கற்றுக் கொடுத்தார். இதுதான்்