பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 35

சித்துஞான முறை என்பதாகும். இந்தக் கலையிலே மீரா சிறந்த வல்லவராகவே திகழ்ந்தார்.

மற்றொரு சித்துஞான முறையைத் திருமதி தியோன் கற்றுத் தந்த அற்புதத்தையும் பாருங்கள்.

சுமார் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு காட்டுப் பகுதியிலே இருந்த ஒரு மலைப் பகுதியை நிர்வகிக்கும் மேலாளர் ஒருவர், சகாரா பாலைவனம் மணற் பகுதி காட்டுக்குள்ளும், மலைப் பகுதிக் குள்ளும் பரவிவிடுமோ என்ற பயத்தில், அதைத் தடுத்திட அந்த மலைமேல் மரஞ்செடிகள் பலவற்றை நடுவது நல்லது என்ற திட்டமிட்டிருந்தார்.

காட்டுத் தோட்டங்களில் நன்கு வளரும் மரம் பைன் என்ற மரம். அந்த மரங்களை மலைமேல் நட எல்லா ஏற்பாடு களையும் அந்த மலை மேலாளர் செய்திருந்தார்.

ஆனால், ஏதோ ஒரு தவறுதலால், பைன் மரக் கன்றுகளுக்கு பதிலாக, பீர் மரக் கன்றுகளை அனுப்பி இருந்தார்கள் தோட்டக் காட்டுக்காரர்கள். பீர் கன்றுகள் என்றும் பாராமல் மலைமேல் நடப்பட்டுவிட்டன.

பீர் மரங்கள் மிகவும் குளிர்பிரதேசமான ஸ்கேண்டிநேவியா நாட்டின் பகுதிகளிலே விளையும் தன்மை பெற்ற மரங்கள். அல்ஜீரியா குளிர் பிரதேசமல்ல; வெப்பம் அதிகமான சகாரா பாலைவனப் பகுதிநாடு அது.

திருமதி தியோன், மேற்கண்ட மர வளர்ப்புகளில் தட்ப வெட்ப நிலைகளை எல்லாம் அறிந்தவர் தான்். என்றாலும் இப்படி யும் இடம் மாறி, தட்ப வெட்ப நிலைகளை மாற்றி நட்டுத்தான்் பார்ப்போமே என்று சித்து ஞானத் திறமையால் அவற்றை நட்டுப் பயிரிட்டார்.

திருமதி தியோனுடைய சித்து ஞானம் வெற்றி பெற்று விட்டது. பீர் மரங்கள் வெப்ப நாட்டில் நன்றாகப் தழைத்துப் பயிராயின. எதிர்பார்த்த அளவுக்கு பலனையும் தந்தன. அதனால், பாலை வன மணல் அங்கே வந்து பரந்து குவியாத நிலையேற் பட்டதுடன், காட்டுப் பகுதியே தொடர்ந்து பரவலாகியது. எப்படி?