பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

பீர் கன்றுகளை நட்டு மூன்றாண்டுகளான பிறகு, டிசம்பர் மாதத்தின் ஓர் இரவு நேரத்தில் நன்றாகத் துங்கிக் கொண்டிருந்த திருமதி தியோன் திடீரென விழித்துக் கொண்டார்.

அன்றிரவு நிலா வெளிச்சமும் இல்லை. ஆனால், திருமதி தியோன் துங்கிக் கொண்டிருந்த அறையின் ஒரு பக்கம் மூலை ஒரமாக சந்திர ஒளி திடீரென்று பளிச்சென்று தெரிந்தது.

வியப்பு மேலிட்டால் திருமதி தியோன் அந்த அறை மூலையை உற்று நோக்கினார்! அங்கே ஒரு விந்தையான வியப்பான, சித்திரக் குள்ளன் உருவத்தைக் கண்டார்.

அவனுக்குத் தலைபெரியது; நாடகக் கொட்டகையிலே சிரிக்க வைப்பதற்காகவே நடமாடும் நகைச் சுவைக் குள்ளன் அணிந்து கொண்டிருக்கும் தலைக் குல்லாயை அந்தக் குள்ளன் தலையிலே அணிந்து கொண்டிருந்தான்்,

பார்வையோ அவனுக்குக் கூர்மையாக இருந்தது. பச்சை நிறம் செருப்பைக் காலில் மாட்டிக் கொண்டிருந்தான்். தாடியில் நீண்ட முடி தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவன் உடலெல்லாம் பனிப் போர்வைபோல மூடிக் கொண்டிருந்தது.

குள்ளனைக் கண்ட திருமதி தியோன், 'ஏய் குள்ளா என்ன செய்து கொண்டிருக்கிறாய் அங்கே?' என்றார்.

டிருககற ற کنیت۔

இந்த வினாவை அவர் ஏன் தொடுத்தார்? சித்திரக் குள்ளன் உடல் மேல் போர்வை போல போர்த்திக் கொண்டிருந்த பணி உருகி உருகி, தரையில் தேங்கி, தனது விரிப்பை வீண்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்த பிறகு தான்், தியோன் எழுப்பினார் அந்தக் கேள்வியை,

குள்ளன் பதிலேதும் கூறாமல், ஓர் இனிமையான புன் சிரிப்புடன், பீர் மரங்கள் எங்களைப் கூப்பிட்டன. அதனால் நாங்கள் வந்திருக்கிறோம்! நான் பனித் தேவன் பீர் மரங்கள் பணி நாட்டிலே பரவலாகத் தோன்றும் பசுமையான மரங்கள்.

ஆகவே, அந்த பீர் மரங்களது அழைப்பை ஏற்று, நாங்கள் எனது பரிவாரங்களுடன் வந்திருக்கிறேன். இதையும் உங்களுக்கு