பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 37

அறிவிக்க வேண்டியது எனது தொழிலறம்! அதனால் நானும் வந்துள்ளேன். என்றான்.

கடும் வெப்பப் பூமியான சகாரா பாலைவனத்தில் எப்படி வரும் பனிப் படலங்கள்? என்று மீண்டும் கேள்விக் கணையை எய்தார். திருமதி தியோன்.

சரி, எப்படி நீங்கள் பீர் கன்றுகளை மிகத் திறமையாக பயிரிட்டீர்கள் என்றான் சித்திரக் குள்ளன்.

அதற்குத் தியோன், "குள்ளனே நீ உரைப்பது உண்மையோ - அல்லவோ எனக்குத் தெரியாது. ஆனால் நீ, இப்போது எனது தரையைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறாய். உடனே போ! வெளியேறு!" என்றார்.

குள்ளன் போனான் அங்கே காய்ந்துக் கொண்டிருந்த நிலா ஒளியும் மறைந்தது. ஒரு விளக்கை ஏற்றிக் கொண்ட தியோன். அங்கே கூர்ந்து பார்த்தார். அவன் உடலிலே இருந்து உருகிய பனிநீர். அங்கே தேங்கி இருப்பதைப் பார்த்தார். எனவே, தியோன் கண்டது கனவு அன்று:

பொழுது புலர்ந்தது! மலைப்பகுதிகள் எல்லாமே பணிப் போர்வைகளால் போர்த்தப்பட்டிருந்த காட்சிகள்! இதற்கு முன்பு அன்றுவரை நடந்தே இராத அற்புதக் காட்சியாக அது அமைந்திருந்தது. அன்றிலிருந்து ஆண்டாண்டுகள் தோறும் அந்த மலைப் பகுதிகள் இன்றும் குளிர்காலப் பனிக் கோலங் களாகவே இருந்து வருகின்றன.

கீழே உள்ள நிகழ்ச்சி அன்னை அவர்கள் தனது தெய்வீக வாயாலேயே மொழிந்த சம்பவம் இந்த அற்புத நிகழ்ச்சி. இதையும் படித்துப் பாருங்கள்.

நான் அல்ஜீரியா பகுதியிலே இருந்து இரண்டாவது முறை யாகத் திரும்பி வந்தேன். திரு தியோனும் என்னுடன் கப்பலில் வருகை தந்தார்.

நடுக் கடலில் கப்பல் மிதந்துக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு கடும் புயல் எழுந்தது. வான் முட்ட எழுந்த