பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

கடலலை கள் கப்பலை ஆட்டி அசைத்து அலை கழித்துக் கொண்டிருந்தன.

கப்பல் பயணிகள் இடையே பயம் கவ்விக் கொண்டது! ஆட்டமாடும் கப்பலுக்குள்ளே இங்குமங்கும் ஓடுகிற பயணிகள்: என்ன நிகழுமோ என்ற மனக்கலக்கம் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில், கப்பல் ஒட்டுநர்களின் தலைவன் 'கப்பல் அபாயத்தில் அலைமோதுகின்றது என்று அறிவித்து விட்டதால், எந்த நேரத்தில் கப்பல் கடலுக்கடியில் போய்விடுமோ என்று பயணிகள் தங்களது குழந்தைக் குட்டிகளோடு கடவுளை வேண்டிக் கிடக்கின்றார்கள்.

என்னைத் திரும்பிப் பார்த்த திரு தியோன் அவர்கள்; மீரா, நீ போய் இதை நிறுத்திவிட்டு வா" என்றார்.

கேப்டன் தியோன் சொன்னதைக் கேட்டு இவர்கள் என்ன இறை துதர்களா? கப்பலைக் காப்பாற்றிட என்று திகைத்தார்.

நேராக நான் எனது அறைக்குள் சென்றேன். கட்டிலில் படுத்துக்கொண்டேன். எனது உடலைக் கட்டிலிலேயே விட்டு விட்டுக் கடல்மேல் சென்றுபார்த்தேன். அங்கு சிறு ஜீவன்கள் பலர் ஒன்று சேர்ந்துக் கொண்டாட்டம் அடித்துக் கொண்டிருந்தார்கள். பயணிகளுக்குப் பயமாக இருந்த அந்த ஆபத்துச் சம்பவம், கொண்டாட்டக்காரர்களுக்குக் கேலியாக இருந்தது.

அவர்களிடம் சென்று நான் பேசினேன்; இப்படி எல்லாம் அமளி செய்யாதீர்கள்; எவ்வளவு பயணிகளின் உயிருக்கு உங்களுடன் போராடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது பார்த்தீர்களா? தயவு செய்து உங்களுடைய கூத்தாட்டங்களை நிறுத்துங்கள் என்றேன்.

கொஞ்சம் நேரமானவுடன் அவர்கள் தங்களது கோலாகல கடடங்களை நிறுத்திக் கொண்டார்கள். உடனே கடலும் அமைதி கண்டது. மறுபடியும் நான் எனது உடலுக்குள் ஊடுருவி விட்டேன்.