பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 39

எனது அறையை விடுத்து, பிறகு கப்பல் மேல் தளத்திற்குச் சென்றேன். கப்பல் தலைவர் உட்பட்ட பயணிகள் அனைவரும் பயம் நீங்கி, மகிழ்ச்சிப் பொங்கப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மீரா செய்த இந்த அரிய செயலைதான்் கூடுவிட்டுக் கூடுபாயும் சித்துஞான வித்தையாகும். தனது உடலைக் கட்டிலிலே விட்டுவிட்டல்லவா, மீரா கப்பல் மேல் தளம் சென்று கடல் ஜீவன்களிடம் உரையாடி அடக்கிவிட்டு வந்தார்?

எனவே, தமிழ்நாட்டுச் சித்துஞானம் அப்போது சகாரா பாலைவனம் வரை பரவி இருந்ததாகத் தெரிகிறது அல்லவா? அதற்குரிய சான்றுதான்ே மீராவின் செயல்?

அல்ஜீரியா நாட்டிலே இருந்து மீரா மீண்டும் பாரீஸ் நகர் வந்து சேர்ந்தார். கல்வி, இசை, ஓவியம், சித்துஞானம் ஆகிய கலைகளிலே எல்லாம் மீரா திறமையாளராகத் திகழ்ந்தார். நுண்ணிய சித்துகளில் எல்லாம் அவர் ஓரிரு ஆண்டுகளில் குறிப்பிடத் தக்க வல்லமை பெற்றார்.

இந்தக் கலைகளை மீரா தனது சுயநல நோக்கத்திற் காகவோ, எதிர்கால வருவாய்க்காகவோ, வாழ்வுக்காகவோ கற்றவரல்லர். உலக மக்களுக்கு உதவும் எண்ணத்தில், ஆன்மீகத்திற்குத் துணை செய்யும் நோக்கத்தில், விதிக்கப்பட்ட இறை பணியை, கடவுட் தொண்டை சரிவர நிறைவேற்றி, மக்கட் குலத்தை மேன்மைப் படுத்திட தனது எண்ணங்களை, செயல்களை - அனைத்தையும் தியாகம் செய்தார்.

பாரீஸ் நகரில் திருமதி மீரா மேற்பார்வையில் ஓர் ஆன்மீக ஆய்வு மன்றம், சித்துஞான ஆன்மீகம், ஆய்வு நடந்து வந்தது. இந்தக் கழகத்தில் மீரா சென்று அடிக்கடி ஆன்மீகச் சொற்பொழிவு செய்து வந்தார். நாளடைவில் அந்தப் பொழிவுகளை எல்லாம் திரட்டி நூலாக வெளியிட்டது அந்தப் பாரீஸ் ஆன்மீக மன்றம்.

அதனால் அவர், அங்குள்ள ஆன்மீக ஞானத்தில் எத்தகைய உயர்ந்த தகுதியில் ஆன்மீகர்களால் எண்ணப் பட்டிருந்தால், இறைஞானச் செல்வர்கள் இடையே பேசும் ஞானச் செல்வியாக,