பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4} ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்! அவர் திகழ்ந்திருப்பார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

திருமதி மீரா அவர்களின் இறை வழிபாடு ஞான உரையைக் கேட்ட, பாஹாய் மன்ற உறுப்பினர்களும், அதன் மன்றத் தலைவருமான திரு. பாஹா என்பவரும், திபேத் நாட்டிற்குள் முதன்முதலாக நுழைந்து பெளத்தச் சொற்பொழிவு களைத் தொடர்பாக ஆற்றிவந்த அம்மையார் அலெக்சாண்டர் டேவிட் நீல் என்பவரும், ஐரோப்பிய கண்டத்தின் மற்ற நாட்டு ஞானியர்களும், சான்றோர்களும், பெரியார்களும் எவ்வளவு பெருமதிப்பு வைத்துப் பாராட்டிப் போற்றினார்கள் பார்த்தீர்களா நமது ஞானி மீராவை?

மகான் அரவிந்தர் தனது விடுதலைப் போரின் தேச பக்தப் போராட்டங்களை 1910-ஆம் ஆண்டில் முடித்துக் கொண்டு சிறையிலே இருந்து வெளிவந்த சூட்டோடு சூடாக, பிரெஞ்சு ஆட்சியிலே அடிமைப்பட்டிருக்கும். புதுச்சேரி மாநிலத்திற்குள் 1910-ஆம் ஆண்டு, ஏப்ரல் 4ஆம் நாள் நுழைந்து வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, ஆன்மீக உலக வாழ்க்கையிலே ஈடுபட்டுக் கடவுள் கட்டளையை ஏற்றுக் கொண்டிருந்த நேரம்:

மகாத்மா காந்தியடிகள் தனது திருக் குமாரனான தேவதாஸ் காந்தி அவர்களைத் தூது அனுப்பி மீண்டும் சுதந்திரப் போர் அரசியலுக்குத் தலைமை வகிக்க திரு. அரவிந்தரை அழைத்தும்கூட, அவர் வாக்கை மறுத்து ஆன்மீகத்திலேயே அவர் உழன்று கொண்டிருந்த நேரம்:

வங்க நாவலராகவும், வழக்கறிஞராகவும், தியாக வீரராகவும் திகழ்ந்த சித்த ரஞ்சன்தாஸ் அவர்கள், அரவிந்தருடைய அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் வாதாடி போராடியிரா விட்டால், அரவிந்தர் சிறை வாழ்விலேயே செத்திருப்பார் அந்த அளவுக்கு திறமையான இளம் வழக்கறிஞராக அப்போது திகழ்ந்த சி.ஆர்தாஸ் எனப்படும் வங்க விடுதலை வீரர் சித்த ரஞ்சனன் தாஸ், ஒரு கடிதம் எழுதி அரசியலுக்கு அழைப்பு விடுத்திருந்தும், அந்த அழைப்பையும்