பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 45

வெளிவரும் வெள்ளம்போல பரவும். அவர் அண்மதியாக அமர்ந்து உரையாடும்போது, இந்த மோன உருவம் அறுவடை செய்த ஞான விவசாயமா இவை? என்று எல்லோரும் வியந்து போற்றுவர் 'ஆர்யாவைப் படித்து முடித்ததும்.

அரவிந்தர் எழுதமாட்டார். டைப் ரைட்டரின் முன்பு உட்கார்ந்துக் கொண்டு அவரே தட்டுத் தடங்கலின்றி வேகமாகத் தட்டச்சைத் தட்டித் தட்டி ஒலி எழுப்புவார் என்று அன்னை மீரா அடிக்கடி அச்சுக் கோர்ப்பவர்கள் இடையே பேசும்போது கூறுவார்.

"அதை அறிந்தவன் எல்லாம் அறிந்தவன் ஆகிறான்” என்பது உபநிடத வாக்கு. மகரிஷி அரவிந்தர் அந்த உபநிடத ஞானத்தை 1914ஆம் ஆண்டிலேயே அறிந்த மகானாக் காட்சி தந்தார்.

கிழக்கு இந்திய பாரத புண்ணிய மண்ணில் ஆர்யா உதய சூரியன் ஆகும் அந்த வான் ஒளியின் கதிர்கள் மேற்கே உள்ள பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்கும் சுடர்கள் போல மேகங்களின் கார் மூட்டம் அப்போது காணப்படும்.

முதல் உலகப் போர் 1914-ஆம் ஆண்டில் துவங்கியபோது ஹெர்மன் காசிப் படைகள் கணக ணவத் தாக்ககல்களால்

தனது ஆ த தாககுத فيتية ஐரோப்பா கண்டத்தையே அதிரடித்துக் கொண்டிருந்தன.

அசுர சக்திகளான அந்த நாஜி படைகள் உலகெங்கும் பரவி கோரத் தாண்டவமாடின. திக்குகள் எல்லாமே திக் திக்கென்று திணறிக் கொண்டிருந்தன என்பதால், அதன் வேதனைகளைத் தாங்க முடியாமல் நாடுகள் கதிகலங்கின.

இந்த தீய அசுர சக்திகளை, இராட்சச பலங்களை நமது புறக் கண்களால் பார்க்க முடிவதில்லை. அகக் கண்களைத் திறக்கும் சக்தி கொண்ட யோகியர், அந்த அசுர ஆற்றல்களை தெளிவாகக் காண் கிறார்கள். அந்தச் சக்தி, மனித குலத்தின் சக்தியைத் தங்களுக்குரிய கருவிகளாக்கிக் கொள்வதையும் ஞானியர் நினைவு கொள்கிறார்கள்.