பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


43 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து ஒரே நேரத்தில் மக்கள் மீராவிடம் உதவிகளை எதிர்பார்த்தார்கள். அவர்களுக் குரிய உதவிகளுக்காக, பல மனுக்களும் வேண்டுகோள்களும் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.

அவற்றையெல்லாம் ஆன்மீக முறையில், ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் மீரா அவர்களால் கவனிக்க முடிந்தது. அவர்கள் கேட்ட உதவிகளையும் அவர் அனுப்பி வந்தார்.

முதல் உலகப் போர் 1914-ஆம் ஆண்டிலிருந்து 1918-ஆம் ஆண்டு வரை நடந்ததை உலகம் உணரும். அந்த ஆபத்தான் நேரத்தில் நடந்த எல்லா கொடுமைகளையும் மீரா அவர்கள் உணர்ந்துதான்் இருந்தார்.

திருமதி மீரா அவர்கள் 1914-ஆம் ஆண்டு ஆகஸ்டு 8-ஆம் நாளன்று தனது நாட்குறிப்பில் என்ன எழுதி வைத்துள்ளார் என்பதையும் படித்து பாருங்கள். இதோ அது :

"மாபெரும் அசுர சக்திகள் புயற்காற்றுபோல உலகத்தின் மீது வந்து கோர தாண்டவம் ஆடுகின்றன. அவை மூர்க்கமும், முரட்டுத் தனமும், அஞ்ஞான இரு தன்மை நிரம்பியவை களாகவும் இருந்தன".

'என் கடவுளே! தெய்வீக நாயகனே! அவற்றை ஒளியுறுத்துவதற்கு வேண்டிய சக்தியை எங்களுக்குக் கொடு. உனது தெய்வீகப் பேரொளி அவைகளுள் உட்புகுந்து, அவற்றின் செயலை உருமாற்றம் செய்க" என்று கடவுளை வணங்கி வழிபாடு செய்கிறார்.

"தெய்வீக சக்திகளின் வெற்றி ஆகஸ்ட் 17-ஆம் நாள் உறுதி' என்று, இறைவன் உறுதியளித்துள்ளாதாக தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.

திருமதி அன்னை எழுதியுள்ள 'பிரார்த்தனைகளும் - தியானங்களும்' என்ற புத்தகத்தைப் படித்தால், முதலாவது உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் பகைச் சக்திகளின் கொடுரச் செய்கைகளால் உலகம் எத்தகைய பெரும் ஒரு காரிருளில் சிக்கிக் கிடந்தது. எவ்வளவு பெரிய வேதனைகளையும் இன்னல்