பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 49

களையும் அனுபவிக்க வேண்டி இருந்தது என்பது நன்கு புரிகின்றது.

கருணைக் கடலான திரு. அன்னை இந்தப் புவி முழுவதும் தம்மை ஒன்றுபடுத்திக் கொண்டு, உலகத்தின் சுமைகளை எல்லாம் தன்மீது சுமத்திக் கொண்டு, இந்த உலகத்தின் பொருட்டு, உலக மக்களை வாழ்விப்பதற்காகக் கடவுளை எவ்வளவு துதித்து வணங்கி வழிப்பட்டிருக்கிறார் என்பதும் புரியும்.

அன்னையின் வேண்டுகோளை ஏற்ற ஆண்டவன், எவ்வாறு அருள் பாலித்து பதில் தந்துள்ளார் என்பது எல்லார்க்கும் புரியும்படி, அந்த நூலைப் படிக்கும்போது நாம் கான முடிகின்றது.

உலகப் போரைப் பார்த்தவர்களுக்கும், கேட்டவர் களுக்கும் அந்தப் போர் உலக மக்கள் மேல் எத்தகைய ஒரு பெரிய பயங்கரமான, படுநாசமான அழிவுகளை உண்டாக்கி யிருக்கின்றது என்பதையும் அறியலாம்.

ஆனால், உண்மையில் அது திரைக்குப் பின்னால், நுண்ணுலகில் தெய்வ சக்திகளுக்கும் அசுர கொடும் பலங்களுக்கும் இடையே நடைபெற்ற ஒரு கடுமையான யுத்தம் ஆகும். அந்தச் சக்திகள் மக்களை ஒரு பெரும் கருவிகளாகப் பயன்படுத்தி இருக்கின்றன.

அன்னை மீராவுக்குக் கடவுளுடன் மிக நெருங்கிய தொடர்பு எப்போதும் இருந்து வந்ததது. அவரது, 'பிராத்தனை களும் - தியானங்களும்” என்ற நூலில், அன்னை ஆண்டவனு டன் நடத்திய நேரிடையான உரையாடல்களைக் காணலாம்.

அன்னை, தான்் நினைத்த நேரங்களில் உலகத் துன்பங்களில் இருந்தெல்லாம் தம்மை விடுவிடுத்துக் கொண்டு, நிலையாக, இறைவனுடன் ஒன்றிய நிலையில் பேரமைதியுடன் ஆனந்தமாக இருந்திருக்கிறார்.