பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

ஆனால், கடவுள் அவருக்கு இட்ட ஆணை வேறு. இருளும், பொய்மையும், மரணமும், துயரமும், நிறைந்த இந்த உலக உண்மையும். ஒளியும், அமைதியும் மகிழ்ச்சியுமாய் உள்ள ஒரு தெய்வீக நிலைக்கு அழைத்துச் செல்வதே அன்னையின் பெரும் பணி என்பதை இறைவன் அவருக்குச் சிறு பருவத்தில் இருந்தே நன்கு உணர்த்தி இருக்கிறார். அதுவல்லாமல் அடிக்கடி அவருக்கு அதை நினைவூட்டியும் வந்தார்.

இதே கட்டளையைத்தான்் மகான் அரவிந்தருக்கும் கடவுள் அறிவுறுத்தினார். இதை ஒரளவு அறிந்திருந்த அசுர சக்திகளும், பகை பலங்களும், இருட் சக்திகளும் தங்களது பிடிப்பிலிருந்து மனித சக்திகள் தப்பிப் போவதை விரும்பாமல், ஒன்று திரண்டு உலகத்தின் மீது படையெடுத்து ஆக்ரமிக்க, பல வகை முயற்சிகள் செய்து வருகின்றன. கால பலத்தால் அவையாவும் வீழ்த்தப்பட்டன. ஆனாலும், உலகத்திலிருந்து அவற்றை முழுவதுமாக விரட்டி யடிக்கப்படுவது உறுதி.

மனித குலம், கடவுள் பால் திரும்பி, அகந்தையை, ஆணவத்தை அகற்றி, ஆன்மீகத்தை ஏற்க விரும்பினால், கடவுளுடையை வெற்றி, ஆண்டவனது ஆட்சிப் புதுயுகம், என்றோ அல்லது இன்றோ நிறைவேறும்.

இந்த இறை வெற்றியை வேகப்படுத்தவே, மனித குலத்தை அமர வாழ்க்கைக்கு மகிழ்ச்சி வாழ்க்கைக்கு, தெய்வீக வாழ்க்கைக்குத் தயாரிக்கவே மகரிஷி அரவிந்த பெருமானும், அன்னை பெருமாட்டி மீராவும் இந்த உலகில் தோன்றினார்கள்.

உலகில் இந்த இலட்சியத்தை முழுமையாக நிறைவேற்றி வைப்பதற்கும், அந்த இலட்சியத்தை எதிர்த்து நிற்கும் இராட்சச சக்திகளை அழித்து விரட்டுவதற்கும், மிக உயர்ந்த ஆன்மீக அதி உன்னத சக்தியை, பொன்னொளியைக் கொண்டு வரவேண்டி இருந்தது.

இந்த உலகத்திலே தெய்வீக வாழ்வை நிலை நிறுத்துவது என்பது மனித சக்தியால் ஆகக் கூடிய காரியம் அன்று.