பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

அதி உன்னதமான ஓர் இயற்கையான இறை சக்தியின் முழுமையான ஆற்றல் இதைச் செய்ய இயலும்.

இந்த அதிமானசத்தை. உன்னத இயற்கை ஆற்றலை. மேலே இருந்து கீழே இறக்கி வருவதே மகான் அரவிந்தரின் முயற்சி, அவரது தவம்.

மனிதர்களின் இந்த அதிமானசத்தை ஏற்றிடத் தயார் படுத்துவதே அன்னை என்ற தகுதியிலே தாயாக நின்று பணி புரிவதே, அன்னை மீரா அவர்களின் தெய்வீகப் பணிகள் ஆகும்.

ஆனால், அன்னைக்குத் தனது சொந்த முக்தியிலோ, சித்தியிலோ சிறிதும் அக்கறை இல்லை. இந்த இலட்சிய நிறைவேற்றத்தின் பொருட்டு, திருமதி அன்னை, மனித குலத்தின் துன்பங்கள், துயரங்கள், எல்லாவற்றையும் தனக்குள் ஏற்று, அவற்றுக்குரிய முடிவைக் காண வேண்டியது முக்கியமாயிற்று அவசியமும் ஆயிற்று.

உலக நிலை காரணமாகவும், மனிதர்கள் தங்கள் ஆசை, ஆணவம், விருப்பம் வெறுப்புகளை விடுத்து, இறைவன் உதவியை நாட மனம் இல்லாதிருந்தாலும், இலட்சிய நிறைவேற்றத்தில் கால தாமதம் ஏற்பட்டது.

அந்த தாமத நிலை இருந்தாலும், மகான் அரவிந்தர், அன்னை பெருமாட்டி ஆகிய இருவருடைய மகாயோக சக்திகளின் விளைவாகவும், 1950-ஆம் ஆண்டில் மகரிஷி அரவிந்தர் செய்த அரும்பெரும் தியாக சக்தியின் பயனாகவும்: 1956-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ஆம் நாளன்று; இந்த உலகத்திலே கடவுளின் உயர்ந்த அற்புத சக்தி இறங்கி வெளிப்பட்டது.

முதல் உலகப் போர் மூண்டு விட்ட காரணமாகப் பாரீசுக்குத் திரும்பிய அன்னை மீரா, அங்கே ஓராண்டு காலமே தங்கி இருந்தார். அதற்குப் பிறகு 1916ஆம் ஆண்டு ஜூன் திங்களில் அவர் ஜப்பான் நாட்டுக்குச் சென்றார். அங்கே சுமார் நான்கு ஆண்டுகள் தங்கினார்.