பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ప్లొ

to

ஆசிரமம் அமைத்த பின் அன்னை அமரர் ஆனார்:

1916-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜப்பான் நாட்டுக்குச் சென்ற அன்னை, அங்கே சுமார் நான்கு ஆண்டுகள் தங்கியதற்கு என்ன காரணம் தெரியுமா? ஜப்பானியர் கலைஞர்கள்

ஜப்பான் நாட்டு மக்கள் பெளத்த மதத்தையும், சாக்கிய மகானுடைய அறநெறிகளையும் பின்பற்றிய அவர்கள் அருள் உள்ளத்தையும், கலை மனத்தையும், வாழ்க்கை நெறிகளின் அழகுணர்ச்சிகளையும் அன்னை கண்டார்.

ஜப்பானியர்களின் அன்றாட வாழ்க்கையே ஒரு கலைத் துறைச் சம்பவங்களைப் போல அமைந்துள்ளதாக அவர் உணர்ந்தார். அதல்லாமல், உலக மக்கள் வாழ்க்கை முறை களிலேயே ஜப்பான் மக்கள்தான்் மிகச் சிறந்த கட்டுப் பாடுடையவர்களாக இருக்கிறார்கள் என்பது அவருடைய முடிவும் கருத்தும் ஆகும்.

'அழகுணர்ச்சியான அந்த வாழ்க்கை முறை தெய்வ வாழ்க்கை ஆகாது. தூல உலகில் இறைவன் எழில் மூலமே வெளிப்படுகிறான்' என்று அன்னை அங்கே அறிவித்தார்.