பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 55

அவ்வளவுதான்் அந்த நெருப்பு தேவன் வந்த வழியே சென்று விட்டான்.

தெய்வ அன்னையின் சக்தியை எதிர்த்து, நெருப்புத் தேவனால் நெருங்க முடியவில்லை. இது ஒரு பலப் பரீட்சை யாருக்குப் பலம் அதிகம் இருக்கிறதோ அவருக்குத் தான்ே வெற்றி?

ஆனால், ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இரண்டு மூன்று வீடுகளுக்கு அப்பாலுள்ள ஒரு வீடு எரிக்கப்பட்டது.

ஒரு வீட்டை அவனுக்கு எரிக்க அனுமதி இருந்தது. அன்னை இருந்த வீட்டை எரிக்கத் தடை ஏற்பட்டதால், அவன் மற்றொரு வீட்டை எரித்து விட்டான்.

இரண்டவதாக, அன்னை பெருமாட்டி மரணத்தின் தேவனான இயமனைச் சந்தித்தக் காட்சி இது.

இரண்டாவது அற்புதம்

சாவுகள் ஏற்படுவதைக் கவனிக்க நுண்ணுலகில் ஒரு பெரிய இறப்புக் கணக்கெடுப்புத் துறையே இருக்கிறதல்லவா? இது நாம் எல்லாரும் கேள்விப்பட்ட செய்திதான்ே! அந்த மரணக் கணக்கெடுப்பு நிறுவனம் பெருந் திறமையோடு பணியாற்றி வருவதுதான்ே அதன் வாடிக்கையான பணி?

மரண தேவதைகள் ஒன்றிரண்டுகள் அல்ல; நூற்றுக் கணக்கில் இருக்கிறார்கள். அவர்களின் இருவரை ஆவது நான் பார்த் திருக்கிறேன் என்று அன்னை அவர்கள் அறிவித்து உள்ளார்கள்.

அன்னை எங்கே சந்தித்தார் அவர்களை? என்று கேட்க விரும்புகிறீர்களா? இதோ அன்னையே கூறுகிறார் கேட்போம்!

பிரான்சு நாட்டில் ஒருவனையும், ஜப்பானில் மற்றொரு வனையும் அன்னை சந்தித்துள்ளாராம்! அவை வெவ்வேறு தேவதைகள் நாடுகளுக்குத் தகுந்தாற்போல, நாட்டின் பண்பாடு, கல்வி, மதம், இவற்றுக்கு ஏற்றவாறு அதற்குரிய மரண தேவன் இருக்கிறான்.