பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 59

அரைப் பகுதித் தலையோடு அன்னையின் சக்தியை எல்லாம் உறிஞ்சிடத் தயாரானது.

அன்னை பெருமாட்டி அப்போது என்ன சொல்கிறார் தெரியுமா? ...நான் சாகப் போகிறேன் என்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. என்னால் சிறிதும் அசைய முடியவில்லை. அசைவற்று அப்படியே மூச்சுப் பேச்சற்றுக் கிடக்கிறேன். அது என் உயிரை எல்லாம் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. முடிவும் நெருங்கி விட்டது என்று எனக்குத் தோன்றியது.

அப்போது திருமதி அன்னை மீரா, தமது சூட்சம சக்தியை எல்லாம் திரட்டி அவனை எதிர்த்துப் போராடினார். சிறிது நேரத்தில் அன்னை அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. அவன் தன் மார்பை விட்டு இறங்கி ஓடி போய் விட்டான். அன்னை சிறிது நேரம் கழித்து எழுந்தார்.

இப்போதுதான்் அந்த ப்ளு காய்ச்சல் அவரை பற்றிய விவரமெல்லாம் பளிச்சென்று நன்றாகப் புரிந்து விட்டது.

முதல் உலகப் போரில், முக்கியமாக அதன் இறுதிக் கட்டத்தில், போர்க் குழிகளில் நூற்றுக் கணக்கான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அவ்வளவு பேரும் வாலிபர்கள். நல்ல திட காத்ர உடலுடன் நலமாக இருந்தவர்கள்.

திடீரென அவர்கள் உயிர் இவ்வாறு உடலை விட்டு வெளியேற்றப்பட்டவுடன், நாங்கள் இறந்து விட்டோம் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. அங்குமிங்கும் அலைந்து கொண்டு, தாங்கள் பறிகொடுத்த உயிரைக் காப்பாற்ற உயிரோடு இருப்பவர்களின் உடற் சக்தியை உறிஞ்சத் தலைப்பட்டார்கள்.

அதாவது, அவர்கள் கணக்கற்ற பேர்களாக, உயிரை உறிஞ்சும் பேய்களாக ஆகிவிட்டார்கள். போரின் விளைவு அவ்வளவு கொடுரமானது.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அன்னை அவர்கள் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டார்.