பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அவரது நண்பர் அதற்குப் பிறகு அவரைக் காண வந்தபோது, ஆ! உங்களுக்கு அந்தக் காய்ச்சல் வந்ததா? நான் அப்போதே நினைத்தேன். அப்படித்தான்் நடந்திருக்கும் என்றார்.

அன்னையான அற்புதம்

இந்த இரண்டு மூன்று நாட்களாக ஊரில் யாருக்குமே ந்தக் காய்ச்சல் வரவில்லை. ஏற்கெனவே, நோயில் |ழுந்தவர்களும் பிழைத்து விட்டார்கள். நோய் போய் விட்டது; தியும் நீங்கி விட்டது. நான் நினைத்தபடியேதான்் டந்திருக்கிறது! என்றார் வந்த அந்த நண்பர் அன்னை அவர்களிடம்.

a.

o

நடந்தது இதுதான்். பேரருளும், பெருங்கருணையும் உள்ள உலக அன்னை - தம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள், தம் குழந்தைகள், அநியாயமாக மடிந்து போவதைக் கண்டு, இரக்கம் கொண்டு, அந்த நோயை தம்மீது ஏற்றுக் கொண்டு, நோயின் கொடுமைகளை முழுவதுமாக, தாமே அனுபவித்து, பேய்ச் சக்தியோடு போராடி அந்த மக்களைக் காப்பாற்றி இருக்கிறார்.

பல உயிர்களைக் காப்பாற்றிய தாயாக, அன்னை அவர்கள் ஜப்பானில் காட்சி தந்தார். அதனால் அவர் அன்னை என்று மக்களால் அழைக்கப்பட்டார். புதுச்சேரி வந்தார் அன்னை!

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஜப்பான் நாட்டிலிருந்த தெய்வீக அன்னை மீரா, 24.04.1920-ஆம் ஆண்டன்று கப்பல் ஏறி புதுச்சேரி நகர் நோக்கி வந்தார்.

புதுவை நகர் கடற்கரைக்கு இரண்டு மைல் தூரத்தில் அன்னை வந்த கப்பல் கடலில் இருக்கும்போதே, மகான் அரவிந்தருக்குத் செய்தி தெரிந்ததும், அவரது சாந்நித்யமும், ஒளியும் அவ்வளவு தூரம் பரவி நிற்பதை மிகவும் கண்கூடாகக் கண்டார்.

'இப்போது நாம், மகான் அரவிந்தரின் சாந்நிய்மும் அதாவது சமூக ஆன்மீகத்திற்குள் நுழைகிறோம், என்பதை மிகத்