பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§2 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

தெய்வீக வாழ்க்கைக்கு அடிப்படையானது ஒழுங்கும், கட்டுப்பாடும்தான்் அவசியம் என்பதை அன்னை ஓர் ஆசிர மத்தை நிறுவி, அதன் மூலம், புதுச்சேரியில் நிலை நாட்டினார்.

ஜப்பானில் இருந்து அன்னை புதுச்சேரிக்கு வருகை தந்ததும். அதனால் உருவான உடனடிப் பயன் குறித்து மகான் அரவிந்தர் தனது தலையாய மாணவர் நளினிகாந்த குப்தா அவர்களுக்குக் கூறும்போது,

ஆசிரமம் அன்னை பெருமாட்டியின் தெய்வீகப் பணிக்குரிய படைப்பு. ஒளியும், எழிலும், எளிமையும், பொலிவும், உயரியதோர் வாழ்க்கைக்கும், உலகத்திற்கோர் எடுத்துக் காட்டாகவும், இன்று ஆசிரமம் விளங்குகிறது.

அன்னையால் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த தெய்வீக ஆசிரமத்திலே, எழிலும், எளிமையும், ஒழுங்கும், கல்வியும், இறை ஞான வாழ்வும் எப்போதும் குடி கொண்டிருக்கும்.

அன்னை அவர்கள் 1920-ஆம் ஆண்டில் புதுச்சேரி நகருக்குள் வந்து நிரந்தரமாகத் தங்கியதற்குப் பிறகே அரவிந்த ஆசிரமம் அமைக்கப்பட்டது.

ஆனால், இத்தகையதோர் இறை ஞான வாழ்வுக்குரிய ஞானக்கோட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற எண்ணம், அன்னை மீரா சிறு பருவப் பெண்ணாக இருந்தபோதே ஏற்பட்டு விட்ட தெய்வீக ஞான ஆசையாகும்.

அந்த அவா, அன்னை புதுச்சேரிக்கு வந்த பிறகுதான்் ஞானப் பூவாகப் பூத்து மலர்ந்து இன்று உலகெலாம் மணர்ந்து நுகர்ந்து வரப்படுகிறது.

ஆன்மீக ஞான வாழ்வு வாழ விரும்புவோர், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, கண்டம், நாடு, மதம், சாதிகள் பேதா பேதங்கள் இல்லாமல் வாழ விரும்புவோருக்கு, முழு நேரங் களையும் அந்த இலட்சியத்திற்காகவே செலவிட விரும்பு வேர், அவர்களுடைய அத்தியா வசியத் தேவைகளைப் பூர்த்தி