பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 63

செய்வதற்கான திட்டம்தான்் அன்னை நிறுவிய மகான் அரவிந்தர் ஆசிரமத் திட்டம் ஆகும்.

அன்னை சிறு வயதினராக இருந்தபோதும் சரி, ஆப்பிரிக்கா கண்டத்தில் சித்து ஞான வித்தைகளிலே சித்தத்தைச் செலவிட்ட போதும் சரி, பாரீஸ் போன்ற நவநாகரிக நாடுகளிலே வாழ்கின்ற ஆன்மீக நாட்டமுடையோர்களும் சரி, ஓர் உயரிய லட்சிய வாழ்க்கையைக் கடைசி காலக் கட்டத்திலே வாழ நினைத்த, ஆன்மீக ஞான அடிமைகள் பலர் இந்தப் பிரச்னையை அன்னை முன்பு வைத்தார்கள்.

எங்களுடைய முழு நேரமும், வயிற்றுப் பிழைப்பு களுக்கும், வாழ்க்கைத் தேவைகளுக்குமே உழைக்க செலவழிக்கப்படுகிறது. என்ன பயன் அதனால் எங்களுக்கு?

எங்களது ஞான ஆர்வத்திற்கு நீங்களாவது ஒரு வழிகாட்டக் கூடாதா? என்ற வேண்டுகோளை மகான் அரவிந்தரிடமும், அன்னை யிடமும் உலக ஆன்மீகீகள் வேண்டிக் கேட்டுக் கொண்டதின் விளைவே இந்த அரவிந்த ஆசிரமம் தோற்றத்திற்குரிய மூல காரணமாகும்.

'தனக்கு எப்போதவது ஞான வாழ்வை எதிரொலிக்கும் ஆசிரம வாழ்க்கை வாழ நேர்ந்தால், உறுதியாக உங்களைப் போன்றவர்களுடைய மனோதிட அவாவை நிறைவேற்றிய தீருவேன்' என்று அன்னை தனது சிறு வயதில் ஏற்ற சபதம், 1920-ஆம் ஆண்டில் புதுச்சேரியில்தான்் அரவிந்த ஆசிரமமாக உருப்பெற்று உயர்ந்து உலகப் புகழ் பெற்றுள்ளது.

அரவிந்தர் உள்ளத்தில் ஊடுருவிய கிருஷ்ண சக்தி

1926-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் நாளன்று, அரவிந்தருடைய யோகத்தில் ஓர் அரிய சித்தி உண்டானது. அதுதான்் கிருஷ்ணனுடைய தெய்வ பக்தி; ஆன்மீக அருள் உணர்வு. அரவிந்தரின் யோக சித்தியில்; அவரது உடலில் இறங்கிய நாளாகும்.