பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


64 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அந்த மகரிஷி அரவிந்தரது யோக சித்தியின் வெற்றியையே, கிருஷ்ண சக்தி உணர்வாக அன்னை ஏற்றுக் கொண்டு, அந்த கிருஷ்ண பரமாத்மா ஆணைக்கே சேவை செய்யும் உள்ளுணர்வின் எதிரொலியே புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் தோற்றம் ஆகும்.

அரவிந்தரது உடலில் கிருஷ்ண உணர்வு ஊடுருவிய பிறகே, அவர் மகான் அரவிந்தர் என்று ஆன்மீக உணர்வாளர் களால் போற்றப்பட்டார்.

இதன் பிறகே, மகான் அரவிந்தரும் - அன்னையும் சேர்ந்து செய்ய வேண்டிய ஆன்மீக வேலை, தெய்வப் பணி ஆகியவற்றிலே ஈடுபட்டு பெரும் பகுதி ஆசிரமப் பணிகளை முடித்தார்கள். அந்த ஆசிரமம், இப்போது அருகுபோல் வேரூன்றி ஆலமரமாக நின்று ஆன்மீக உலகுக்கு இன்றும் பணி புரிவதைப் பார்க்கின்றோம்.

திருமதி அன்னை அவர்கள், தாமே நிறுவிய ஞானா சிரமத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு, உலகப் புகழ்பெற்ற தெய்வத் தாயாக, மக்களால் போற்றி வணங்கப்படும் அன்னை யாக நம்மிடையே வாழ்ந்து வந்தவர், 17.11.1973-ஆம் ஆண்டன்று தமது உடலை நீத்து அமரர் ஆனார்:

அன்னை அவர்கள் அமைத்த ஆசிரம நிர்வாகத்தையும் அந்த ஞானாசிரமம் மக்களுக்கு எவ்வாறு பயன்பட்டு வருகின்றது என்ற வரலாற்றையும் அடுத்தப் பகுதியில் பார்ப்போம்!