பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 67

அரவிந்தர் பிறந்த நாளில் சுதந்திரம்

ஆகஸ்டு 15-ஆம் நாள் அரவிந்தர் பிறந்த நாள். அதே நாளில் அதாவது ஆகஸ்டு 15-ஆம் நாளில், 1947-ஆம் ஆண்டன்று இந்தியா சுதந்திரம் பெற்றது. அரவிந்தர் சிறு வயதிலே இருந்து அரும்பாடுபட்ட இலட்சியம் அவர் பிறந்த நாளன்றே நிறைவேறியது. அதுதான்் அவரது தியாகத்திற்குக் கடவுள் அருளிய சித்தமாகும்.

மகான் அரவிந்தரும், அன்னை மீராவும் ஈடுபட்டிருந்த உலக ஆன்மீக முன்னேற்றத்திற்கு முக்கியமான இரண்டு அரும் பணிகள் வெற்றிகரமாக நிறைவேறின.

ஒன்று, உலகப்போர்; மற்றொன்று இந்தியா சுதந்திரம் பெற்ற விடுதலைப் போர்! ஆனாலும், வேலை முழுமையாக இன்னும் முடிய வில்லை. அவர் வாழ்ந்த காலமான 1947-ஆம் ஆண்டு வரையுள்ளக் கணக்கீட்டில் கூறுகிறார் - அரவிந்தர் இன்னும் முடியவில்லை என்று!

இப்போது ஆண்டு 2004 - அல்லவா? எவ்வளவோ முன்னேற்றங்களை நாடு பெற்றும் - அனுபவித்தும் வருவதை நாம் பார்க்கவில்லையா?

அரவிந்தர் ஏன் இன்னும் வேலை முடியவில்லை என்றாரென்றால், அதிமானசம் எனப்படும் Super Mind உணர்வை மேலே இருந்து கீழே இறக்கிக் கொண்டு வந்து; உலக உணர்வில் நிலைநாட்டி வெளிப்படச் செய்ய வேண்டிய வேலை இருந்ததால், அரவிந்தர் பெருமான் அப்போதுள்ள நிலவரப்படி “வேலை முடியவில்லை” என்று குறிப்பிட்டார்.

அந்த நேரத்தில் மகரிஷி அரவிந்தரது உடலில் அதிமானசம் என்ற தெய்வீகப் பொன்னொளி இறங்கிக் கொண்டிருந்தது. அது தொடர்ந்திருந்தால் அவரது உடல் அமர உடலாக ஆகி இருக்கக் கூடும். -