பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அரவிந்தர் அமரரானார்

ஆனால், அது தனி ஒருவரின் சித்தியாக இருந்திருக்கும். அத்தகைய தனிப்பட்ட சித்தியில் மகான் அரவிந்தருக்குச் சற்றும் அக்கரை இல்லை.

மக்களின் அறியாமை, மந்த புத்தி காரணமாகவும், மற்றும் வேறு சில காரணமாகவும் மகரிஷி அரவிந்தரின் அலுவல் சித்தியில் தாமதம் ஏற்பட்டது. இதைத் தவிர்க்கும் பொருட்டு ஒரு பெரும் தியாகம் செய்திட பொன் நிறமாக மாறிக் கொண்டிருந்த தம் உடலையே தியாகம் செய்ய நினைத்தார்.

1950-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5-ஆம் நாள், மகான் அரவிந்தர் புதுச்சேரி ஆசிரமத்திலேயே தம் உடலை நீத்தார்:

மிகப் பெரிய இந்த மகத்தான் தியாகத்தின் உணர்வால், 'ஒளி மனம் இந்த உலகத்தில் நிலை நாட்டப்பட்டது என்று அரவிந்தர் இறப்பை தத்துவ ரீதியாக அன்னை வருணை செய்தார்.

அடுத்த ஆறு ஆண்டுகளில் அதாவது 1956-ஆம் ஆண்டு வரை, அன்னை பெருமாட்டியின் அற்புத உழைப்பை மேற்கொண்டு ஆசிரமப் பணிகள் மிக வேகமாக நடந்தன. இந்த விரைவான வேகத்தால் 29.02.1956ஆம் ஆண்டன்று அரவிந்தருடைய இலட்சியம் அன்னையின் அயராத உழைப்பால் மாபெரும் வெற்றி பெற்று முன்னேறியது.

SLPER WÄND என்றால் என்ன?

அதிமானசம் என்றால் என்ன? Super Mindக்குரிய தத்துவ உணர்வுகள் என்ன? இதை நாம் உணர வேண்டும்.

அதிமானசம் என்பது தெய்வீக அமர உணர்வு. بينما يلي ஆனந்த ஆற்றல்; மங்காத பொன்னொளி: பேருண்மை; பேரமைதி, பேரானந்தம் ஆகிய தெய்வீக இயல்புகளைத் தன்னகம் கொண்ட தத்துவ உணர்வுகள் ஆகும்.