பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

துலமாயும் நிலவி இருந்தது. நான் உயிருள்ள ஒரு தங்க மயமான வடிவில் இந்த உலகத்தைவிட பெரிய ஓர் உருவில் இருந்தேன். உலகையும், கடவுளையும் பிரித்து வைக்கும் ஒரு பெரிய கடினமான தங்கக் கதவுக்கு எதிரிலே இருந்தேன்.

கதவை நான் பார்த்துக் கொண்டே “வேலை வந்து விட்டது' என்று உள்ளத்தில் உறுதி கொண்டேன். அதே நேரத்தில் அந்த வேளை வந்து விட்டதையும் உணர்ந்தேன். உடனே என் இரு கைகளாலும், ஒரு பெரிய தங்கச் சம்மட்டியை உயரத் தூக்கிக் கதவின் மீது பலமான ஓரடி கொடுத்தேன்.

பொடி பொடியாயிற்று கதவு. உடனே அதிமானசப் பேரொளியும், சக்தியும், உணர்வும் மேலே இருந்து உலகத்தின் மேலே தடைபடாத வெள்ளமாகப் பாய்ந்தன”.

அன்று முதல் அந்த பிப்ரவரி 29-ஆம் தேதியை "இறை வனது திருநாள்" என்று பெயரிட்டார் அன்னை அவர்கள்.

நுண் உடல் பணியை முடித்த அன்னை அவர்களது பரு உடலிலும், அதன் அணுக்களிலும் இந்த அதிமானச சக்தியை இறக்கி, அவற்றை உருமாறச் செய்யும் கடினமான வேலையில் இறங்கினார். இது அடுத்தப் படி,

இந்த புனிதப் பணி இதுவரை எந்த யோகியாலும், செய்யப்படாத ஒரு வேலை. இது இங்கு ஒரு புதுயோக சித்துக்கு வழி காட்டுவதாக அமைந்தது.

அரவிந்தர் ஆசிரமம் அன்னை நிர்வாகம்!

புதுச்சேரியில் அமைக்கப்பட்ட அரவிந்த ஆசிரமத்தில், பள்ளிக் குழந்தைகள், சிறுவர், சிறுமியர், மாணாக்கர், சாதகர் என்ற பிரிவினர்கள் உண்டு. எல்லாரும் சேர்ந்து இன்று சுமார் 2000 பேர்கள் ஆசிரமத்தில் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் அன்னையின் குழந்தைகளாக, அவரவர்களின் வழியில் மனித உரிமைகளோடு சுதந்திரமாக வளர்ந்து வருகிறார்கள்.