பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

இவை எல்லாவற்றையும் தெளிவாக உணர்ந்திருந்த அன்னை; பிரெஞ்சுப் புரட்சி உலகுக்கு வழங்கிய முப்பெரும் தத்துவங்களான சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம் என்ற தத்துவங்கள் தோன்றி உலகுக்கு அளித்த மண்ணில் பிறந்த வரல்லவா அன்னை?

அதனால், அந்தத் தத்துவங்களுக்கு எடுத்துக்காட்டாக, சான்றாக ஆன்மாவின் அடிப்படையில் ஆசிரமத்தை அமைத்து உலகத்துக்கோர் உதாரணமாக, அடையாளமாக நிறுவினார் - அன்னை:

அன்னை உருவாக்கிய அந்த ஆசிரமம், உலகத்திற்கே ஒர் ஒப்பில்லாத சமுதாய நகர்போல திகழ்ந்திருக்கின்றதை நாம் இன்றும் காண்கின்றோம்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் கடுமையாக ஈடுபட்டதால், இந்தியாவின் கிழக்கு வாயிலான அரக்கான் யோமா, பெகுயோமா என்ற மலைப் பகுதிக் கதவுகளை ஜப்பான் பர்மா கூட்டுப் பேரணி நாடுகளால் தட்டப்பட்டதை நாம் அறிவோம்.

போர் பாதிப்பு உண்டானதால் 1942-ஆம் ஆண்டுக்குப் பிறகு, வங்க தேச பக்தர்கள் தங்களது குடும்பத்தோடு அரவிந்த ஆசிரமத்தில் சேர விரும்பினார்கள். அதனால், அன்னை அந்த மக்களுக்காக ஓர் ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. ஏன் ஆசிரம அனுமதி மறுக்கப்பட்டது வங்க மக்களுக்கு? அரவிந்தரும் வங்க நாட்டைச் சார்ந்தவர்தான்ே? அவர்களுக்கு மறுக்கப்பட்டதற்கு என்ன காரணம்?

ஆசிரமத்தின் விதி முறைகள்

அரவிந்தர் ஆசிரமத்தில் இல்வாழ்க்கைக்கு இடமில்லை; அதற்கான அனுமதி எப்போதும் கிடையாது. ஆனால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட ஒரு சாதகராக இருக்கலாம் குடும்ப வாழ்க்கைக்காரர்கள் என்ற முறையிலே எவரையும் ஆசிரமத்தில் சேர்க்கப்படுவதில்லை.