பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 73

ஆசிரமத்தில் குழந்தைகளும் வருகிறார்கள். அவர்களுக் காக அன்னை ஒரு கிண்டர் கார்டன் பள்ளியைத் துவக்கினார். அது இப்போது மேற்படிப்புகள் அனைத்துக்கும் பயன்படும் கல்விக் கோட்டமாக வளர்ந்துள்ளது. மருத்துவம், பொறியியல், பொருளியல், தத்துவம், வரலாறு, வானியல், அறிவியல் போன்ற பாடங்களையும், வகுப்புகளையும் நடத்திக் கொண்டிருக்கின்றது.

அவை மட்டுமல்ல; தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற அயல்நாட்டு மொழிகளும், இந்திய மொழிகள் எல்லாமே பெரும்பகுதி ஆசிரமப் பள்ளியில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அங்கே உள்ள மாணவர்கள் அவரவர் பாடங்களை எந்த மொழியில் வேண்டுமானாலும், விருப்பம் போலவே தத்தமக்குரிய கல்விகளைக் கற்கலாம்.

ஆசிரமத்தில் எல்லா வகைப் பாடங்களுக்குமுரிய ஆசிரியர் கள், தக்க தகுதிகளோடு பணி புரிகிறார்கள். இந்தியாவிலும், மேல் நாட்டிலும் பட்டம் பெற்ற பேராசிரியர்களும் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் ஆசிர சாதகர்கள்! இறைவனுக்கு ஆற்றும் ஆன்ம சேவைகளாகவே கருதி அவர்கள் பணியாற்றுகிறார்கள்.

இந்தக் கல்விக் கோட்டம் 1952-ஆம் ஆண்டில், பூரீ அரவிந்தர் அனைத்து நாட்டுக் கல்வி நிலையம்' என்ற பெயர் மாற்றம் பெற்றது. அற்புதமான கல்விக் கோட்டம்

மகான் அரவிந்தரின் இலட்சிய நிறைவேற்றத்திற்கு, ஒரு புது மனித இனம், தெய்வீக இனம், உலகத்தில் பிறப்பதற்கு உதவும் வகையிலேயே; இந்தப் பல்கலைக் கழகம் அன்னை பெருமாட்டி அறிவுரைக்கு ஏற்றபடி அந்தக் கல்வி நிலையம் அறிவுத் தொண்டு ஆற்றி வருகின்றது.

இந்தக் கல்வி நிலையத்தில் பாடம் கற்பிக்கும் முறை முழுக்க, முழுக்க புதுமையான முறையில் நடந்து வருகின்றது. இந்தக் கல்விக் கூடத்தில் தேர்வுகள் இல்லை; மாணவர்களுக்குச் சான்றிதழ்கள், பட்டங்கள் வழங்கும் பழக்கம் இல்லை.