பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!


'அருள் நயந்த நன்மார்க்கர் என்றால் - யார்? ஒரு கட்சி ஆட்சி ஒழிந்து, வேறோர் கட்சி ஆட்சியில் அமர்ந்து அரசு நடத்தும் பொறுப்பு மட்டும் தானா? அவ்வாறானால், மக்களாட்சித் தத்துவம் நடை பெறும் இந்தக் காலத்தில் - அருள் நயந்த நன்மார்க்கர்கள் - யார்?

பறம்பு நாட்டை செங்கோல் ஓச்சிய பாரியின் ஆட்சியை அருள்நயந்த நன்மார்க்கன் ஆட்சி எனலாம். பசுங்கன்று ஒன்று மன்னன் மகனது தேர்க் காலில் சிக்கிக் கொண்ட நேரத்தில் - தனது ஒரே மகன் அரசு வாரீசுடையவன் என்றும் பாராமல், ஆராய்ச்சி மணியை அடித்த ஒரு தாய்ப் பசுவின் அபயக் குரலுக்குக் கருணை காட்டி தனது மகனைத் தேர்க் காலிலிட்டுக் கொன்றானே மனு நீதி சோழன்; அவனது ஆட்சியை அருள் நயந்த நன்மார்க்கர் ஆட்சி எனலாம் அல்லவா?

தனது ஆட்சியிலே உள்ள ஓர் ஏழை மகன் வெளியூர் சென்றபோது, தனியே தனித்து பெண் ஒருத்தி எப்படி வீட்டில் இருப்பேன் என்று அஞ்சிக் கணவனிடம் முறையிட்டு நள்ளிரவில் கூறிக் கொண்டிருந்ததை, மன்னன் கரிகாலன் தனது நகரத்தை பற்றி ஒற்றாடி வந்தபோது அந்தத் தம்பதியர் விவரத்தைக் கேட்டான்!

சில நாட்களுக்குப் பிறகு, வழக்கம்போல் அந்த மன்னன் ஒற்றாடி வந்தபோது, அந்த ஏழை வீட்டில் யாரோ இருவர் உரையாடிக் கொண்டிருப்பதை ஒற்றாடி கேட்டு, எவனாவது கள்வனாக இருக்குமோ என்றுக் கருதி, ஐயப்பட்டு, ஒலியாடல் கேட்ட அந்த வீட்டுக் கதவை தட்டினான். யாரது என்று கேட்ட எதிர் குரல் அவள் கணவனுடையதோ என எண்ணிய, பிறகு, அந்த வீதியிலே இருந்த எல்லா வீட்டுக் கதவுகளை எல்லாம் வரிசையாகத் தட்டிக் கொண்டே மன்னன் அரண்மனையை சென்று அடைந்தான்்!

மறுநாள் அந்த வீதி வாழ் வீட்டார் எல்லாரும் மன்னனிடம்; "மன்னா, கரிகாலன் ஆட்சியில் கள்வனா என்று முறையிட்டு, யாரோ ஒரு திருடன் எங்கள் வீதியிலுள்ள வீடுகளின் கதவுகளை