பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய மீராபாயும் - ஃபிரான்ஸ் மீராவும்!

குறிப்பு : இதுவரை ஃபிரான்ஸ் நாட்டின் மீராவைப் பற்றிய வரலாற்றுச் சுருக்கத்தைப் படித்தீர்கள். இந்திய நாட்டு மீராபாய் கதைச் சுருக்கம் இது.

இந்திய நாட்டு மீராபாய் சம்பவங்களையும், ஃபிரான்ஸ் நாட்டு மீராவின் நிகழ்ச்சிகளையும் ஊன்றி படித்துணர்ந்து, இரண்டுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த அத்தியாயம் தரப்பட்டிருக்கிறது)

ஆன்மீக ஞானம் என்ற குழந்தைக்கு முதன்முதலாக ஆராரோ பாடிய ஞானத் தொட்டிலாக விளங்கிய பூமி இந்திய நாடு. இந்த நாட்டின் வட பாகத்தில் உதயப்பூர் என்ற ஒரு சிற்றரசு. பூ நாயகன் என்ற அரசன் அந்த நாட்டை ஆண்டு வந்தான்். அவரது பட்டத்து ராணி சந்திரமுகி என்பவள்.

இந்திய மீரா பிறந்தார்

உதயப்பூர் மன்னனும், மன்னியும் இறை பக்தியெனும் பாலிலே ஊறிய பழச் சுளைகளாக விளங்கி, அந்த நாட்டு