பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

வழிபாடுகள் ஆற்றிட தந்தை பூநாயகரிடம் உத்தரவு பெற்றாள் மீரா.

முன்பைவிட இப்போது மிகுந்த பக்தி வெள்ளப் பிரவாகம் அணை உடைந்து ஓடி வரும் நிலையில் கதா காலட்சேபம், ஆடல் - பாடல் வழிபாடுகளாக தினந்தோறும் ஆற்றி வந்தாள் பக்தை மீராபாய்.

மீரா பாயின் கண்ணன் வழிபாடுகள் உதயப்பூர் நாடு கடந்தும் பரவியது. அப்போது டில்லி சக்கரவர்த்தியாக இருந்த அக்பர் மாமன்னனுக்கும், அவரது அவையிலே பெரும் புகழ் பெற்றிருந்த இசை மேதை தான்்சேனுக்கும் எட்டியது! வியந்தார்கள் அவர்கள் - மீராவின் தெய்வத் தொண்டுகளைக் கேட்டு - மகிழ்ந்து

மீராவின் பக்திப் புகழ் வளர்ந்ததுபோல, கண்ணனையே, கணவனாக மனப்பேன் என்று கூறும் மீராவின் இறை வைராக்கிய மும் வளர்ந்தது.

அதைக் கேள்விப்பட்ட ஊரார், பொறாமை கொண்டு, மீராவைக் கண்டனம் செய்தார்கள். மீரா செயல் இறை களங்கம் கொண்டது, ஆன்ம ஒழுங்கினமானது என்று மன்னனிடம் புகார் கூறினார்கள்.

மன்னன் சினத்தோடு கொதித்தான்்! ஒரு மகளைத் திரு மகள் போலப் பெற்று வளர்த்தும், ஊரார் அவச் சொல் நமக்கு எதற்கு? என்ற கோபத்தோடு மீராவின் தாயிடம் அவளுக்கு நஞ்சு கொடுத்துச் சாகடி' என்று கட்டளையிட்டான்.

நஞ்சிட்டுக் கொல்ல ஆணை

தாய் பதறினாள்; கதறினாள்: திணறினாள்; அழுதாள்; புரண்டாள்; தனது ஒரே மகளுக்கு நஞ்சா? என்று மயக்கமாக விழுந்தாள் எழுந்தாள், விம்மினாள்; விரக்தியானாள்.

உடனே மீரா அம்மாவைக் கண்டு, தாயே - அழாதே! அஞ்சாதே! கண்ணன் இருக்கிறான்! 'எனக்கு நம்பிக்கையோடு