பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 83

நஞ்சைக் கொடு என்று தாயைக் கேட்டு நஞ்சுண்டாள். அமுத மாயிற்று ஆல காலம்! மீராவின் பக்தி நாட்டு மக்களைச் சரணடையச் செய்தது.

மேவார் என்ற நாட்டை ஆண்டு வரும் கும்பரானாவுக்கு மீராவை மணம் செய்ய ஏற்பாடு செய்தார் உதயப்பூர் மன்னர்! ராணா ஏற்கனவே திருமணம் ஆனவர்; மனைவிகள் உள்ளவர்! ஆனால், அவர் தன்னைப் போல் ஒரு தெய்வ பக்தி மணம் கமழும் மனைவியை விரும்பினார்: மணந்தார்.

மனிதனை மணப்பது சரியன்று என்று எண்ணிய மீரா, அற்புதமான கனவு ஒன்றைக் கண்டாள். 'கும்பரானா தெய்வ பக்தியில் மேதை அவரை ஏற்றுக் கொள் என்று ஒரு பெரியவர் கனவிலே வந்து கூறுவதாகக் கனாக் கண்ட மீரா, ஏற்றுக் கொண்டாள் ராணாவை கணவனாக!

மீரா மனந்த கணவன் யார்?

இராணா, சிறந்த பக்தர், ஜயதேவருடைய கீத கோவிந்தம்' என்ற பாடற் தொகுதிக்கு இரசிப்ரியா என்ற பெயரில் உரையும், 'சங்கீத ராஜம் என்ற லட்சணக் கிரந்தத்தையும் எழுதி உரை கண்டவர்.

அத்தகைய ஒரு மேதைக்கு பக்தை மீரா தெய்வ மனம் கமழும் மனைவியாக வருவதால், மேவார் நாட்டில் எங்கு பார்த்தாலும் கண்ணன் திருக் கோயில்கள் எழுந்தன. அன்ன தான் சத்திரங்கள், ஆடல் பாடல், காலட்சேப மண்டபங்கள், பஜனைக் குழுக்கள் தங்க அருமையான மற்ற வசதிகள் எல்லாம் ஊருக்கு ஊர் உருவாயின.

விழாக்கள், கதா காலட்சேபங்கள், ஆடல்பாடல்கள் எல்லாமே நாள்தோறும் நடந்து, நாடே கண்ணன் கதைகள் பக்திப் பூமியாக மாறியது.

இத்தகையக் கோலாகலங்கள் பட்டத்து ராணிக்கும். மன்னனின் தங்கை ஊதாவுக்கும், இரண்டாவது இராணிக்கும் - அவரது பழைய நண்பர்களுக்கும், பிடிக்கவில்லை.