பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

பொறாமை தீ அரண்மனையைப் பற்றிக் கொண்டு பரவியது. தீயை அணைப்பவருக்குப் பதிலாக நெய் ஊற்றுவோரே அதிகமாகக் காணப்பட்டார்கள்.

இளையராணியின் சூட்சியை, வஞ்சத்தைப் புரியாத மீரா, அவளைத் தனது அந்தப் புரத்துக் கண்ணன் கோயில் வழிபாடுகளில் கலந்து கொள்ள அனுமதித்தாள் மீரா,

பக்தை மீரா வழிபாட்டில் மதம், சாதி, பேத வர்க்கப் பாகுபாடுகள் ஏதும் கிடையாதாகையால், எல்லாரும் சமத்துவமாக, சகோதரத்துவமாக, சுதந்திரமாக வந்து குவிந்து வழிபாடுகளிலே கலந்து கொண்டு மகிழ்ந்தார்கள்.

சக்ரவர்த்தி அக்பர் சூட்டிய முத்துமாலைப் பரிசு

சக்கரவர்த்தி அக்பரும், இசை மேதை தான்்சேனும் மன்னர் என்ற மதிப்பில் வாராமல், ஏதோ இரு ஏழைப் பக்கிரிகள் போல வேடமேற்று, மீரா பஜனையிலே கலந்து கொண்டு, விலை உயர்ந்த முத்து மாலை ஒன்றைக் கண்ணன் சிலைக்குச் சூட்டிவிட்டு இருவரும் சென்று விட்டார்கள்.

அரண்மனையே அரசியல் சிக்கல்களில் சிக்கிக் கொண்டிருந்த நேரம் அது. அத்தோடு அக்பர் முத்துமாலை பரிசளிப்பும் நெய்யாக ஊற்றப்பட்டது. என்ன ஆகும் அரண் மனையும் - நாடும்?

கும்ப ரானா மீராவைக் கண்டித்தார்! அத்துடன் பெரிய ராணி, இளைய ராணி, அவள் உறவினர்கள், ஊராரின் மதத் துவேஷிகள், சாதிப் பற்றாளர்கள் எல்லாரும் சேர்ந்து கும்ப ராணா மனதைக் குலைத்தார்கள்! என்ன செய்வார் ரானா? இருந்தாலும், மீரா பற்று அவரை முழுமையாக ஆட்கொண்டதால் கலகங்கள் எதையும் அவர் பொருட்படுத்த வில்லை.

எரிமலை ஆனார் - மீரா பாய்!

இதை அறிந்த மீரா, வழக்கத்தையும் மீறிப் பக்திப் பிரவாக ஊழி போலானாள் இறை வழிபாட்டில் இமயம் போல் நிமிர்ந்து