பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


86 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

வருத்தமும் - சினமும் கொள்வதாகவும், மீரா நாடு துறப்பது அரச நீதிக்கே விரோதம். ஆகையால், மீண்டும் மீரா மேவாருக்குத் திரும்பி வராவிட்டால், நாம் மேவார் மீது படையெடுப்போம் என்றும் ஒலை அனுப்பி வைத்தார் - அக்பர்!

இராணா மனம் உருகியது. ரகுநாத பட்டருடன் பக்கிரி கோலத்தோடு இருவரும் பிருந்தாவனம் புறப்பட்டுச் சென்று மீராவைச் சந்தித்தார்கள். ராணா, மீராவை மீண்டும் மேவார் திரும்புமாறு வேண்டினார். கிருஷ்ணர் பக்தியே தொண்டு!

அதற்கு மீரா, எனக்கு இனி ஊர் ஏது? உறவேது? கண்ணன் இருப்பிடமே எனது ஊர், பக்தி வழிபாடுதான்் எனது தொழில். அப்படிக் கோயிலிலேயே காலம் கழிப்பது என்றால், நான் மேவார் திரும்புவேன். அரசி என்ற தகுதியோடு உங்கள் பின்னால் வந்து என்னால் வாழ முடியாது என்று மீரா கூறிவிட்டார்.

கிருஷ்ண பக்தை மீரா கூறியதற்கு ராணா சம்மதம் தெரிவிக்கவே, மீண்டும் மேவார் திரும்பினாள் மீரா. இராணாவும் சிறந்த பக்தியிலே மேலும் ஈடுபட்டு, இருவருமே மேவார் மக்களுக்கு இறை ஞான உபதேசிகளாக மாறினார்கள்.

அன்று கண்ணன் பிறந்த நாள். கோயிலில் ஒரே கோலாகலம்; வலது கையிலே தம்பூராவும், இடது கையிலே கர தாளம் என்ற சிப்ளா கட்டையுமாக, தீபாலங்கார அரங்கிலே இசை ஒலிகள், கோஷங்கள் முழங்கிய பின்பு, மீரா மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தாள்.

இராணா மன்னர் அலங்காரத்துடன் ஒரு சந்நியாசி போல கண்கள் பளிசோர நின்றுக் கொண்டிருந்தார். மீராவை மணம் செய்ததற்கு முன்பும், பின்புமுள்ள அவருடைய நினைவுகள் அவரைச் சுற்றி எண்ணமிட்டன - மனவட்டத்தில்.

அரண்மனையில் - கிருஷ்ன பஜனை:

மீரா நின்ற நிலையிலே கால் சதங்கைகளுடன், கைத் தாளமும் ஒலிக்க, அற்புதமான கானடா ராகத்திலே தரச மீராலாஸ்