பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 7

எல்லாம் தட்டினான் என்று மன்னன் அவையில் அனைவரும் சென்று நீதி கேட்டு முறையிட்டபோது, 'மன்னன் நடந்த உண்மைகளை உரைத்துத் தனது கரத்தை அப்போதே வெட்டி எறிந்தான்் பொற்கை பாண்டியன் என்ற மாமன்னன். அந்த ஆட்சி அருளாளர் ஆட்சியல்லவா? நன்மார்க்கர் நாடுதான்ே அது?

பருந்து ஒன்றினால் துரத்தப்பட்டு, தன்னை வந்தடைந்த புறாவினைக் காத்து, அதற்காகத் தனது உடம்பிலே உள்ள தசையினை அறுத்துப் பருந்தின் எடைக்கு எடையாகக் கொடுத்த சிபிச் சக்ரவர்த்தி நடத்திய ஆட்சியை அருள் நயந்த நன்மார்க்கர் ஆட்சி எனலாம் அல்லவா? அந்த ஆட்சி பாரத மண்ணிலே நடத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தித்தான்் வள்ளல் பெருமான் அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க' என்றார்.

தமிழ் மன்னர்கள் ஆட்சியிலே கருணை மனம் கொண்ட மன்னர்கள் அருள் நயந்த ஆட்சியை நடத்தினார்கள் என்பதற்குரிய சான்றுகள் மேலும் பல உள்ளன. இத்தகையர் நடத்தும் ஆட்சிகளே 'அருள் நயந்த நன்மார்க்கர்கள் ஆளும் ஆட்சிகளாகும்:

செங்கோல் ஒச்சுபவர்கள் மேற்கண்ட மன்னர்களைப்போல குடிமக்களிடம் கருணை காட்டும் அருளாளர்களாக இருக்க வேண்டும் என்பதுதான்் மனிதநேய ஆட்சி முறைகளாகும்.

கருணையிலா ஆட்சிகள் ஒழிக்கப்பட்டதற்குப் பிறகு, அருள் நயக்கும் நன்மார்க்கர்கள், நாட்டை ஆட்சி செய்தால்தான்், அந்த நாட்டிலே வாழ்கின்ற மக்கள், எந்தவிதத் தீமையும் - அச்சமும் இல்லாமல்; மன்னனது நீதி முறைகளை நம்பி உயிர் வாழ முடியும் என்ற எண்ணத்திலே வள்ளல் பெருமான் அவர்கள், 'அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க’ என்று நமக்கு அறிவுறுத்தினார்! நமக்கு மட்டுமே அன்று! மக்களாட்சியின் வாக்காளர்களுக்கும் சேர்த்துத்தான்் கூறினார்:

வள்ளல் பெருமான் அருட் பெருஞ்சோதியாக, 1874-ஆம் ஆண்டில் ஒளியுருவாக, வடலூர் சித்தி வளாகத்தில் மறைந்த பிறகு, அதே வடலூர் அருகே உள்ள புதுவை மாநிலத் தமிழ்