பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அழைக்கின்றாயா? இதோ வந்துவிட்டேன்' என்று முனு முணுத்த வாயோடு மெல்ல எழுந்து, கர்ப்பக் கிருகத்தை நோக்கி இரண்டடி வைத்த அவள் - இறைவனது விக்ரகத்தைத் தழுவிக் கொண்டாள்!

மின்னல் ஒரு கணம் தனது கோடுகளைப் பளபள வென்று கிறுக்கி அழித்தது ஒளி வட்டம் ஒன்று நடுவே, கண்ணனைத் தழுவிய கோலத்தோடு நின்றாள் மீரா. மறு விநாடி கர்ப்பக் கிருகத்தின் கதவுகள் மூடிக் கொண்டன.

மீராவின் உடல் மறைந்தது. அவளது சேலை மட்டும் கண்ணனைச் சுற்றிக் கிடந்தது; அற்புதமான வேணு கானமும், அதனுடன் மீராவின் இனிய குரலும் கேட்டன: அடியற்ற மரம்போல தரையில் வீழ்ந்து பணிந்து வணங்கினார் ராணா!

அக்பர் பாதுஷா வந்து, மீரா பஜனையின் பக்திப் பிரபாவத்திலே மெய் மறந்து கண்ணன் சிலைக்குச் சூட்டிய முத்து மாலைச் சம்பவத்தைப் பற்றி, ராணா - மீராவிடம் கேட்டபோது, சில சுடுசொற்களோடு கேட்டார் என்று முன்பு கூறியிருந்தோம் அல்லவா?

அந்தச் சுடு சொல் என்ன தெரியுமா? நீ இறந்து போவதே மேல் என்ற ரானாவின் சொல்லைக் கேட்டு ஆற்றிலே விழுந்து மீண்டு இறந்துவிட்டால் என்றும், அங்கிருந்து கரையில் ஒதுக்கப்பட்டு, பிருந்தாவனம் சேர்ந்தாள் என்றும் ஒரு பரம்பரைக் கதை இருக்கிறது.

மீரா மறைந்து போனார். அவளுடைய அமுதமயமான கவிதைகள், பாரத நாட்டை விட்டு மறைந்து போக முடியுமா? மீராபாயும் கும்பரானாவும் நம்முடைய நெஞ்சகத்தையே கோயிலாகக் கொண்டு விட்டார்கள். மீராவின் அருமையான கவிதைகள், இறை ஞானத்தைப் பெருமை படுத்தும் உபதேசங்கள் எனலாம்.

எந்தப் பொருள் மீதும் உண்மையான அன்பு இல்லா விடில், இறைவன் அருள் கிட்டாது என்பதே மீராவின் தத்துவமாகும்.