பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§§ ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அரவிந்தர் சிறைக்குச் சென்றபோது சுதந்திர உணர்ச்சிகள் மக்களிடையே பொங்குமாங் கடலாக, பாரத தேசம் முழுவதும் ஆங்காங்கே பொங்கிக் கொந்தளித்துக் கிடந்தது.

பாரத நாட்டின் சில மாநிலங்களில் வெடித்த வெடிகுண்டு களின் தீவிரவாத தேச பக்திக் காரணமாக, பிரிட்டிஷ் கொடுங்கோலர்கள் ஆட்சி, தேச பக்தர்களைக் கைது செய்துக் கொண்டிருந்தது. வெள்ளையர்களது வெறியாட்சிக் கொடுமை களுக்குப் பயந்த சுதந்திரப் போர் வீரர்கள் ஒடி ஒளிந்தார்கள்.

அந்த சுயராச்சிய வீரர்களில் சிலர் நாடு கடத்தப்பட்டார்கள். இப்போது மியான்மர் என்று அழைக்கப்படும் அப்போதைய பர்மா நாட்டிலே உள்ள 'மாண்டலே’ எனும் கொடுஞ் சிறையிலே அவர்கள் பூட்டப்பட்டார்கள். மற்றும் பல சுதந்திர வீரர்கள் அந்தமான் வெஞ்சிறையிலே வேகடிக்கப் பட்டார்கள் - அதாவது, சித்திரவதைச் செய்யப்பட்டார்கள்.

இந்திய பூபாகமே ஒரு பிணக்காடு போல, சூன்யப் பிரதேச மாகக் காணப்பட்டது. ஆனாலும், ஆங்காங்கே மக்களது சுதந்திர எழுச்சிக் கனல்கள், 'வந்தே மாதரம் என்ற முழக்கங்களால் ஒலிபரப்பிக் கொண்டிருந்தன!

அரவிந்த கோஷ் சிறை சென்றபோது நாடு எவ்வாறு மேற்கண்டபடி காணப்பட்டதோ, அதே கொடுமைகள்தான்் அரவிந்தர் எனும் ஞான மகனாக அவர் வெளியே சிறை மீண்டு திரும்பி வந்தபோதும் காணப்பட்டது. அதாவது நாட்டின் சுதந்திர உணர்ச்சி, போராட்டமெனும் மயான பூமியான சுடுகாட்டில் எரிந்துக் கொண்டிருந்தது.

பாரத நாட்டின் இந்த பரிதாப உணர்ச்சியைப் பார்த்த அரவிந்தர் மனம் வேதனைப்பட்டது; உள்ளம் துடித்தார்; துன்புற்றார்: தேசீய ஞானி அல்லவா அவர்?

கொல்கொத்தா நகரருகே உள்ள உத்தர்பாரா என்ற

இடத்தில், சிறை மீண்ட ஞானியான அரவிந்தருக்கு ஒரு வரவேற்பு விழா நடைபெற்றது.