பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

இருந்தது என்ற செய்திகள் அதிகார வர்க்கத்தினிடையே பரவலாகப் பரவி வந்தன.

அரவிந்தகோஷையோ, சுரேந்திரநாத் பானர்ஜி என்ற தேச பக்தரையோ நாடு கடத்தி விடுவதால் மட்டுமே இந்திய சுதந்திர விடுதலை உணர்ச்சியைத் தடுத்துவிட முடியாது என்ற எண்ணமும் அப்போது மக்களிடம் சுழன்று கொண்டிருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சி, சுதந்திர உணர்ச்சியைத் தடுக்கக் கொடுமை யான நடவடிக்கைளை எடுத்துக் கொண்டு வந்ததற்கேற்பவே, அப்போது புரட்சி இயக்கவாதிகளின் செயல்களும் தொடர்ந்து வந்தன. அதனால், அதிகார வர்க்கம் அப்போது வெறி பிடித்தாற் போலவே காணப்பட்டது.

இவற்றை எல்லாம் உணர்ந்து கொண்ட அரவிந்தர், வெள்ளைக்காரர் ஆட்சியுடன் நேரடியாக மோதிக் கொண்டிருப் பதைவிட நாடு முழுவதும் தேசிய இயக்க நிறுவனங்களின் கிளைகளைத் துவக்கி, மக்களுக்குள்ளே புதியதோர் எழுச்சி உணர்ச்சிகளை உருவாக்கவே அரும் பாடுபட்டு வந்தார்.

அந்த எழுச்சிக்கு ஏற்ப முதல் நடவடிக்கையாக, அயல் நாட்டிலே இருந்து வரும் பொருட்களை வாங்கக் கூடாது என்ற பிரச்சாரத்தைக் கடுமையாகச் செய்து வந்தார் அரவிந்தர்.

அரவிந்தரின் இந்த நடவடிக்கைகளை, இந்திய விடுதலைத் தந்தையான காந்தியடிகள் பிற்காலத்தில் ஆதரித்தார். இந்தக் கொள்கையைத்தான்் காந்தியடிகள் விதேசி-சுதேசி போராட்டம் என்று மக்களிடையே அறிமுகம் செய்து வைத்துப் போராடினார்.

இந்த நிலையில் அரவிந்தர், தனது போராட்ட எண்ணங் களைக் காந்தியடிகள் ஏற்று செயல்படுவதைக் கண்டு, தனது பொதுமக்கள் சேவையை வேறு ஒரு பாதையில் மாற்றி அமைத்துக் கொண்டார். அதாவது, ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்ட அரவிந்தர், இந்த அரசியல் போராட்டப் பாதைகளைக் காந்தியடிகளிடமே விட்டுவிட்டார்.