பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


క్తి ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அமைக்க விரும்புவதாகக் கூறி, அவரையும் திருப்பி அனுப்பி வைததா?.

அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் தன் சார்பாக மிகத் திறமையாக வாதாடிய தேசபந்து என்று மக்களால் அழைக்கப் பட்ட சித்தரஞ்சன்தாஸ் என்ற வங்காள தேச விடுதலைப் போராட்ட வீரர், அரவிந்தருக்கு ஓர் அஞ்சல் எழுதினார். அக் கடிதத்தில் அவர், அரவிந்தரை மீண்டும் அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தினார்.

தனக்காக, வழக்கில் ஓயாது உழைத்திட்ட சித்தரஞ்சன் தாசுக்கு மட்டும் அரவிந்தர் ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர்,

'அன்புள்ள சித்த,

நான், வழக்குக்கு முன்பிருந்த உணர்ச்சியோடும், ஊக்கத்தோடும், நோக்கத்தோடும் அரசியல் ஆக்கப் பணிகளில் இறங்கி உழைக்க முடியாது. அந்த அரசியல் பணிகளுக்கும் மேலாக, உயர்வாக, ஒரு குறிக்கோளுக்காகவே உழைக்க விரும்புகிறேன். அந்த இலட்சியம் வெற்றி பெற்ற பின்பு, அதையே ஆதாரமாகக் கொண்டு செயற்படத் திட்டமிட்டு விட்டேன்' என்று குறிப்பிட்டு அக் கடிதத்தைத் தாசுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த லட்சியம்தான்் என்ன? என்பதை விவரிக்க நினைத்த அரவிந்தர், அப்போது 'ஆரிய' என்ற ஒரு பத்திரிக்கையை துவக்கினார். அந்த இதழில், வேதங்கள், உபநிடதங்கள், யோகம், காவிய விமரிசனம் ஆகியவற்றைப் பற்றித் தெளிவாக எழுதி வந்தார்.

அந்தப் பத்திரிகைக்குப் பாரதநாடு முழுவதுமிருந்து ஆதரவு பெருகியது. அறிஞர் பெருமக்கள் எல்லாம் அதை முழுமனதுடன் வரவேற்றுப் பாராட்டினார்கள். அதனால், அரவிந்தரின் பாதை என்ன என்ற நோக்கம் எல்லாரிடமும், நாடு முழுவதுமாகப் பரவியது.