பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 97

அரவிந்தர் ஆசிரமத்தின் ஆன்மீக ஞானம் நாளாகவாக உலகெங்கும் ஒளிவீசிப் பரவியபடியே வளர்ந்து வந்து கொண்டிருக் கின்றது. அன்னைதான்் ஆசிரமவாசிகளின் ஞானத் தலைவியாகக் காட்சி தந்தார்.

அன்னையே ஆசிரம வளர்ச்சிக்குரிய உயிரோட்டமாக இருந்து வந்தார். ஆசிரமவாசிகள் அவருக்கே பதில் கூற கடமைப்பட்டவர் களாக விளங்கி வந்தார்கள். சாதகர்கள் சாதனைகளுக்கு அல்லல்கள் சூழ்ந்தால் அவற்றை அகற்றிடும் அன்னையாகவே அவர் திகழ்ந்தார்.

ஆசிரமவாசிகளது வசதிகள்,தேவைகள், நலன்கள், வளன்கள் ஆகியவற்றை அன்னையே உடனிருந்து ஏற்றுத் தக்க உதவிகளைச் செய்து தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்து வந்தார்.

இந்த சமத்துவ, சகோதரத்துவ, ஆன்மீக ஞான ஆசிரமத் திலேயே தனிமையாக வாழ்ந்து வந்த அரவிந்தர் என்ற மகான், 1950-ஆம் ஆண்டில், டிசம்பர் மாதம் ஐந்தாம் நாளில் காலத்தோடு கலந்தார்.

அந்த மகான் வாழ்க்கை வரலாறு எப்படிப்பட்ட அற்புதங் களோடு அமைந்தது என்பதை இனிவரும் அத்தியாயங்களிலே படித்துத் தெரிந்து கொள்ளலாமா?