பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

 அடுத்த குழந்தை உண்டாகவேண்டும்? மொத்தம் எத்தனை குழந்தைகள் பெறவேண்டும் ? இந்தக் காரியங்கள் வாழ்க்கையை இன்பமாகச் செய்யவேண்டுமானால், அதற்காகச் செய்யவேண்டிய காரியங்கள் எவை ? என்பன போன்ற விஷயங்களைப் பற்றிக் கனவில்கூடச் சிந்திப்பதில்லை.

ஆனால் இந்த விஷயங்களை அறிந்து அவ்வறிவின் படி நடக்கும் தம்பதிகளே சந்தோஷமாக வாழ்வார்கள். அதை எண்ணி நான் 18 ஆண்டுகட்கு முன்னர் "விவாகமானவர்கட்கு ஒரு யோசனை ” என்ற 'பெயருடன் ஒரு நூலை எழுதினேன். (சென்னை, காந்தி நிலையம் வெளியீடு). அதற்குச் சென்னை ஸ்டான்லி வைத்தியக் கல்லூரியில் தலைவராயிருந்த டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி முகவுரை எழுதினார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் அந்த நூலைப் பரிசீலனை செய்து பாராட்டுப் பத்திரம் வழங்கினார்கள். அது இப்போது 12-ஆம் பதிப்பாகத் தமிழ் மக்களிடையே உலவி வருகின்றது.

"இப்போது இரண்டு ஆண்டுகளாக விவாகமானவர்கட்கும் விவாகமாகாதவர்க்குமாகக் கீழ்க்கண்ட "மூன்று யோசனைகளைக் கூறி வருகின்றேன் :--

(1) உடல் நலமாக இருக்க விரும்பினால் ஆண், பெண் இருபாலாரும் உடற்பயிற்சி செய்யவேண்டும். நாடோறும் 10 நிமிஷம் ஒழுங்காகச் செய்தால் போதும். தொந்தி உண்டாகாது. உண்டாகியிருந்தால் மறைந்து விடும், நோய் வராது. பெண்களுக்குப் பிரசவத்தில் கஷ்டமிராது.

(2) குழந்தைகளை நன்றாக வளர்க்க விரும்பினால் இரண்டு மூன்றுக்கு அதிகமாகப் பெறலாகாது. அதற்காகக் கணவராவது மனைவியாவது ஆப்பரேஷன் செய்துகொள்ள வேண்டும்.