பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

காது. குழந்தை பிறக்காது என்பதைத் தவிர வேறு எவ்வித வேறுபாடும் கிடையாது. குழந்தை எப்படி உண்டாகிறது ? ஆண்மகனுடைய விதையில் பெண்ணிடமுண்டாகும் முட்டையுடன் சேர்ந்து கருவுண்டாக்கும் விந்துயிர்கள் உண்டாகின்றன. அவை ஒரு மெல்லிய குழாய் வழியாகச் சென்று விந்துப் பை என்ற பையில் சேர்கின்றது. கலவி சமயத்தில் அவை வேறு சில சுரப்பு நீர்களுடன் சேர்ந்து கோசம் (ஆண் குறி) வழியாக வெளியேறுகின்றன. அவை பெண்ணின் கருப்பை வழியாகச் சினைக் குழாய்க்குள் நுழைகின்றன. சினைக்குழாய்க்கு வரும் முட்டையுடன் அவ்வுயிர்களுள் ஒன்று கலந்துவிடுகிறது. அதைத்தான் கரு உண்டாவதாகச் சொல்லுகிறோம்.

விந்து விந்துப்பைக்குச் செல்லும் குழாயை விந்துக் குழாய் (Vas) என்பர். ஆப்பரேஷன் செய்யும்போது டாக்டர் அந்தக் குழாயின் நடுப்பாகத்தில் அரை அங்குலம் வெட்டி எடுத்துவிட்டு வெட்டுப்பட்ட இருமுனைகளை இறுகக் கட்டி விடுகிறார். அதனால் இந்த ஆப்பரேஷன் விந்துக் குழாய் வெட்டல் (Vasectomy) எனப் படும்.

விந்துக் குழாயில் அரை அங்குலம் வெட்டி எடுத்து விடுவதால் விதையிலிருந்து விந்து விந்துப்பைக்குப் 'போய்க் கலவிச் சமயத்தில் குய்யம் (பெண் குறி) உள்ளே சென்று கரு உண்டாக்குவது தடைப்பட்டு விடுகின்றது.

விதையானது விந்துயிர்களை மட்டும் உண்டாக்குவதில்லை. அது விதை ஹார்மோன் என்னும் ஒருவித சுரப்பு நீரை உண்டாக்குகின்றது. அந்த நீர் உண்டாகாவிட்டால் விந்து உண்டானாலும் பயனில்லை. அந்த நீர்தான் ஆண்மை தருவது. ஆண்மை என்பது