பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

ஆண் குறி பெண் குறிக்குள் நுழையக்கூடிய அளவு கட்டியாகி நிற்பதாகும்.

விந்துக் குழாயை வெட்டிவிட்டால் விந்துயிர்கள் வெளிப்படா. விந்து நீர் சுரப்பது நிற்பதில்லை. அதனால் ஆப்பரேஷன் செய்துகொள்பவர்கள் முன்போலவே கலவி இன்பம் துய்ப்பார்கள். அதில் எவ்விதக் குறைவும் ஏற்படுவதில்லை.

நான் இவ்விதம் விளக்கிச் சொன்னபோதிலும் சில நண்பர்களுக்கு அச்சம் விட்டு விலகுவதில்லை. இந்த ஆப்பரேஷன் செய்தால் மூளைக் கோளாறு ஏற்படுமாமே என்று கேட்கிறார்கள். அப்படி அவர்கள் கேட்பதற்குக் காரணம் சில டாக்டர்கள் தான்.

என்னுடைய நண்பர் ஒருவரிடம் சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள டாக்டர் ஒருவரும், கோவையிலுள்ள டாக்டர் ஒருவரும் கூறியதுண்டு என்பதை அறிவேன்.

இவர்கள் மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் விந்துக் குழாய் வெட்டும் ஆப்பரேஷன் செய்தால் மூளைக்கோளாறு உண்டாகும் என்று எதை வைத்துக் கூறுகிறார்கள் என்று விளங்கவில்லை.

ஆனால் விஷயம் யாதெனில் மருத்துவ நிபுணர்கள் எல்லோரும் மூளைக்கோளாறு உண்டாகாது என்று மட்டும் கூறவில்லை. மனோசக்தி பெருகும் என்றே உலகப் பிரசித்தி பெற்ற அறுவை வைத்திய நிபுணர் சர். ஆர்பத்நெட் லேன், உலகப் புகழ் பெற்ற காம நூல் அறிஞர் ஹாவ்லக் எல்லிஸ் போன்றவர்கள் கூறுகிறார்கள். (இங்கிலாந்து எலிசபெத் இராணியின் மருத்துவர் ஹார்டர் பிரபு பதிப்பாசிரியராகவிருந்து வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் மருத்துவக் கலைக் களஞ் சியம் 11-ஆம் தொகுதி 579-580 பக்கங்கள் பார்க்க).