உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எந்த ஆப்பரேஷன் நல்லது?

நாடு நலம் பெறவும், நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும் நலம்பெறவும் ஒவ்வொரு தம்பதிகளும் இரண்டு மூன்று குழந்தைகட்கு அதிகமாகப் பெறலாகாது என்று அறிஞர்கள் கூறி வருகிறார்கள். அரசாங்கத்தாரும் அவ்விதமே பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அப்படியானால் எல்லோரும் காதலின்பம் அனுபவிப்பதை விட்டுத் துறவிகளாக ஆகிவிட வேண்டுமோ, அது எல்லோர்க்கும் சாத்தியப்படுமோ ? என்று சிலர் கேட்கிறார்கள். இரண்டு மூன்று குழந்தைகள் போதும் என்று கூறுவோர் யாரையும் துறவுகொள்ளச் சொல்லவில்லை. காதலின்பத்தை விட்டுவிடவேண்டும் என்று கூறவில்லை. அவர்கள்

காதல் காதல் காதல்-இல்லையாயின்
சாதல் சாதல் சாதல்

என்று பாரதியார் பாடியதை அறிவார்கள், அதைச் சரியென்று ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்கள்.

அவர்கள் காதலின்பம் வேண்டாம் என்று கூறவில்லை, அதிகக் குழந்தைகள் வேண்டாம் என்றே கூறுகிறார்கள். காதலின்பம் துய்த்தால் கருத்தரிக்குமே என்றால் காதலின்பம் துய்த்தாலும் கருத்தரியாமல் இருப்பதற்கான வழிகளை டாக்டர்கள் கண்டு பிடித்திருக்கிருர்கள். கணவனோ மனைவியோ ஒரு ஆப்பரேஷ்ன் செய்துகொண்டால் கருத்தரியாது என்று கூறுகிறார்கள்.

டாக்டர்கள் கூறும் இந்த ஆப்பரேஷன்கள் சிறியவை, எளிதில் செய்யக் கூடியவை, எவ்வித அபாய