பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

மும் இல்லாதவை, காதலின்பம் கடுகளவும் குறையாது. குழந்தை மட்டும் பிறக்காது. ஆப்பரேஷன் செய்து கொள்பவர்க்கு உடல்நலம் முன்னிலும் சிறந்ததாக இருக்கும். இந்த ஆப்பரேஷனை வெள்ளைக்கார நாடு களில் கிழவர்கள் பலமாக இருப்பதற்காகச் செய்து கொள்கிறார்கள்.

இத்துணைச் சிறந்த ஆப்பரேஷன்கள் யாவை என்று அறிவதற்குமுன் கருப்பம் எவ்வாறு உண்டாகின்றது என்று அறிந்துகொண்டால் நல்லது.

கருப்பம் உண்டாவதற்கு வேண்டிய விந்துயிர்கள் கணவனுடைய விதைகளில் உற்பத்தியாகின்றன. அவை மிக மெல்லிய விந்துக் குழாய்கள் வழியாகச் சென்று விந்துப் பைகளில் தங்குகின்றன. கலவி செய்யும்போது கணவனுடைய கோசத்தில் ஒரு. வழ வழப்பான விந்து நீர் சுரக்கும். விந்துப் பைகளிலுள்ள விந்துயிர்கள் அந்த விந்து நீரில் மிதந்து கோசத்தின் வழியாகக் குய்யத்தில் பாயும். பின் அவை கருப்பப் பை வழியாகச் சென்று சினைக்குழாயினுள் செல்லும்.

ஒவ்வொரு மாதமும் சினைப் பையிலிருந்து ஒரு முட்டை வெளியாகி சினைக் குழாய்க்கு வந்து சேரும். இந்த மாதம் வலது பையிலிருந்து வலது குழாய்க்கு வந்தால் அடுத்த மாதம் இடது பையிலிருந்து இடது குழாய்க்கு வந்து சேரும். விந்துயிர்கள் சினைக் குழாயில் நுழையும்போது அங்கு முட்டை இருக்குமாயின் அதனுடன் கலக்க முயலும். ஏதேனும் ஒரு விந்துயிர் முட்டையுடன் கலந்துவிடுமாயின் அதுவே கருவாகும். உடனே மற்ற உயிர்கள் இறந்துபோகும். கருவானது கருப்பப் பைக்கு வந்து தங்கி வளர்ந்து பத்து மாதங்கள் சென்றதும் குழந்தையாகப் பிறக்கும்.

ஆகவே குழந்தை உண்டாவதற்கு, கருப்பம் தரிப்ப