பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

அதனால் அவை குய்யத்துக்குள் வந்து சேர வழியில்லை. விந்துயிர் குய்யத்துள் வராவிட்டால் கருப்பம் எப்படித் தரிக்க முடியும்? முடியாது.

 இதில் சினைக் குழாய் வெட்டியது தெரிகிறது.

டாக்டர்கள் முட்டையானது சினைக் குழாய்க்கு வருவதைத் தடுப்பதற்காக இரண்டு சினைக் குழாய்கள் ஒவ்வொன்றிலும் அரை அங்குலம் வெட்டி எடுத்து விட்டு அறுத்த முனைகளை இறுக்கிக் கட்டிவிடுகிறார்கள். அதனால் முட்டை சினைக் குழாய்க்கு வராது. விந்துயிர்கள் மட்டும் வந்து பயனில்லை. கருப்பம் தரிக்காது. இந்த ஆப்பரேஷனைச் 'சினைக் குழாய் வெட்டல்' என்று கூறுவார்கள். இந்த இரண்டு ஆப்பரேஷன்களில் எதைச் செய்து கொண்டாலும் கருப்பம் உண்டாகாது, குழந்தை பிறக்காது. ஆனால் சிலர் என்னிடம் இரண்டு ஆப்பரேஷன் கள் கூறுகிறீர்களே, அவற்றுள் எந்த ஆப்பரேஷன் நல்லது என்று கேட்கிறார்கள். எந்த ஆப்பரேஷனைச் செய்வதிலும் கஷ்டமில்லை, அபாயமுமில்லை, எதைச் செய்தாலும் குழந்தை பிறக்காது. ஆதலால் இரண்டு ஆப்பரேஷன்களும் நல்லவைகளே.