பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

மார்க்கும் உங்கள் குழந்தைகளுக்கும் நலம் தேடுமாறு: வேண்டிக்கொள்கிறேன்.

ஆதலால் இந்த ஆப்பரேஷனால் தீமை உண்டாகும் என்று ஆங்கில மருத்துவர் எவரேனும் கூறினால் அவர் அக்கிரமமாகக் கூறுகிறார் என்றும், வேறு மருத்துவர் எவரேனும் கூறினால் அவர் அறியாமையினால் கூறுகிறார் என்றும் எண்ணி அவர்கள் கூறுவதைக் கவனித்தலாகாது.

ஆகவே, மூன்று குழந்தைகள் போதும் என்று முடிவு செய்து கொள்ளுகிறவர்கள் இந்த ஆப்பரேஷனை இம்மியும் அச்சமின்றிக் செய்து கொள்ளலாம். செய்து, கொண்டால் நன்மையே அடைவார்கள்.


ஆதலால்

1. ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தால் தாய் அடுத்த குழந்தையை மருத்துவச்சாலையில் பிரசவிக்க வேண்டும். மருத்துவசாலைக்குச் சென்றதும் மருத்துவரிடம் ஆப்பரேஷன் செய்யவேண்டும் என்று சொல்லவேண்டும். மருத்துவர் குழந்தை பிறந்த மறு நாள் ஆப்பரேஷனை மிக எளிதாக எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் செய்துவிடுவார். குழந்தை பெற்றதற்காக. எத்தனை நாள் அங்கே இருக்கவேண்டுமோ அத்தனை நாள் இருந்தால் போதும். அதிகநாள் இருக்க வேண்டியதில்லை.

2, ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்தால் தந்தை இந்தக் கட்டுரையைப் படித்தவுடனேயே மருத்துவ இல்லத்துக்குப் போய் ஆப்பரேஷன் செய்து கொள்ள வேண்டும். அரசாங்க மருத்துவ இல்லங்களில் இலவசமாக ஆப்பரேஷனும் செய்வார்கள்.