பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

1. மாதவிடாய் கண்டபின் பத்தாம் நாள் முதல் இருபதாம் நாள்வரை காதல் செய்யாமல் இருக்க வேண்டும். மற்ற நாட்களில் காதல் செய்யலாம். இந்த வழியை மேற்கொண்டால் அநேகமாகக் குழந்தை உண்டாகாது.

2. சலவை செய்த மெல்லிய மிருதுவான பழந் துணியைக் கிழித்துப் பெண் உறுப்பில் இறுக்கமாக நுழைக்கக் கூடிய அளவாகப் பந்துபோல் சுருட்டி அது பிரிந்து போகாதபடி நூலால் கட்டவேண்டும். நூல் ஒரு சாண் நீளம் தொங்க வேண்டும். இந்தப் பந்துகள் நாலைந்து செய்து சுத்தமான டப்பாவில் மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காய் எண்ணெய் இரண்டு பங்கு, வேப்ப எண்ணெய் ஒரு பங்காகக் கலந்து ஒரு குப்பியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

காதல் செய்யுமுன் எண்ணெய்யில் துணிப் பந்தைத் தோய்த்துப் பெண் உறுப்பில் கடைசி வரைத் தள்ளி வைக்க வேண்டும். கணவரும் ஆண் உறுப்பில் இந்த எண்ணெய்யைத் தடவ வேண்டும்.

காதல் முடிந்ததும் பந்தை எடுக்கக் காலையில் நூலைப் பிடித்து இழுத்து வெளியே எடுத்து எறிந்து விடவேண்டும். இந்த வழியைச் சிரமம் பாராமல், தவறாமல் கையாண்டால் குழந்தை நிச்சயமாக உண்டாகாது.

இந்த இரண்டு வழிகளும் மிகவும் எளியவை, கொஞ்சமும் கஷ்டமில்லாதவை, இவற்றால் எவ்விதத் தீமையும் ஏற்படாது நன்மையே உண்டாகும்.


மூன்றாவதாக

மூன்று குழந்தைகள் போதும் என்று முடிவு செய்வோர் மீண்டும் குழந்தைகளைப் பெறாமலிருப்பதற்குத் துணையாக மருத்துவர்கள் ஒரு சின்னஞ் சிறிய ஆப்ப