பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

ரேஷனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது இருபது நிமிஷத்தில் முடிந்து விடும். மயக்க மருந்து தரமாட்டார்கள். வலி கொஞ்சமும் தெரியாது. ஆப்பரேஷனால் எவ்விதக் கெடுதலும் உண்டாக மாட்டாது.

இந்த ஆப்பரேஷனைக் கணவனாவது மனைவியாவது செய்து கொண்டால் போதும். குழந்தை பிறக்காது என்பதைத் தவிர வேறு எவ்வித வேறுபாடும் இருக்காது. கணவனும் மனைவியும் முன்போலவே இன்பத்தை அனுபவிக்கலாம். அதில் அணுவளவுகூடக் குறைவு ஏற்படாது.

மேனாட்டில் முதியவர்கள் இளைஞர்கள் போல பல முடையவராக இருப்பதற்காக இந்த ஆப்பரேஷனைத் தான் செய்து கொள்கிறார்கள். அதனால் கணவனோ மனைவியோ ஆப்பரேஷன் செய்து கொண்டால், ஆப்பரேஷனுக்குப் பின்னால் அதிக பலமே உண்டாகும்.

ஆறு மாதங்களுக்குமுன் திரு. கிருஷ்ணன் என்பவர் ஒருவர் தாம் ஆப்பரேஷன் செய்து கொண்டதால் ஆண்மையை இழந்து விட்டதாகத் தினத்தந்தி பத்திரிகையில் எழுதினார். நான் அவருக்குக் கடிதம் எழுதினேன். அவர் என்னிடம் வந்தார். விபரங்களைக் கூறினார். அவர் ஆண்மை இழந்ததற்குக் காரணம் ஆப்பரேஷன் செய்ததல்ல, ஆப்பரேஷன் செய்ததால் ஆண்மை போய்விடுமோ என்று அவர் அஞ்சியதே யாகும் என்று விளக்கிச் சொன்னேன்.

அவர் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தாம் ஆண்மையை மீண்டும் பெற்றுவிட்டதாகவும் அதனால் என்னைத் தமது குலதெய்வமாகப் போற்றுவதாகவும் கடிதம் எழுதினார். ஆகவே, ஆப்பரேஷனால் எவ்விதக் கேடும் உண்டாகவே மாட்டாது.

இந்த ஆப்பரேஷனை ஆங்கில மருத்துவர்களே கண்டு பிடித்திருக்கிறார்கள். அதனால் இதைப் பற்றி