பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

ஏதேனும் அறிய விரும்பினால் அந்த மருத்துவ நூல்களையே பார்க்க வேண்டும். அந்த மருத்துவ நூல் எதுவும் ஆப்பரேஷனால் கேடு உண்டாகுமென்று கூற வில்லை. எல்லா நூல்களும் நன்மை உண்டாக்கும் என்றே கூறுகின்றன.

ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யூனானி போன்ற இதர வைத்திய முறைகளுக்கு இந்த ஆப்பரேஷனைப் பற்றி எதுவும் தெரியாது. ஆகவே, அந்த வைத்தியர்களிடம் இதைக் கேட்பதில் பயனில்லை.

ஆதலால் இந்த ஆப்பரேஷனால் தீமை உண்டாகும் என்று ஆங்கில மருத்துவர் எவரேனும் கூறினால் அவர் அக்கிரமமாகக் கூறுகிறார் என்றும் வேறு மருத்துவர் எவரேனும் கூறினால் அவர் அறியாமையினால் கூறுகிறார். என்றும் எண்ணி அவர்கள் கூறுவதைக் கவனித்தலாகாது.

ஆதலால்

1. ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தால் தாய் அடுத்த குழந்தையை மருத்துவச் சாலையில் பிரசவிக்க வேண்டும். மருத்துவர் குழந்தை பிறந்த மறு நாள் ஆப்பரேஷனை மிக எளிதாக எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் செய்து விடுவார், குழந்தை பெற்றதற்காக மருத்துவச்சாலையில் இருக்க வேண்டிய நாள் இருந்தால் போதும்.

2. ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்தால் தந்தை உடனேயே மருத்துவ இல்லத்துக்குப் போய் ஆப்பரேஷன் செய்து கொள்ளவேண்டும்.

ஆப்பரேஷன் செய்தபின் மருத்துவ இல்லத்தில் படுத்திருக்க வேண்டியதில்லை. வீட்டிலும் படுத்திருக்க வேண்டியதில்லை. அதிகமாக நடக்காமல் ஒரு வாரம் ஓய்வாக இருந்தால் போதும்.

ஆகவே சுகமாக வாழவேண்டுமானால் மூன்று குழந்தைகள் போதும் ஆப்பரேஷன் செய்து கொள்ளுங்கள். நன்மை அடைவீர்கள். அஞ்சவேண்டாம்.